(ஹனீபா)
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் ஒருவரது ஆண்குறியில் சிறுநீர் வழி பிறப்பால் கீழ் நோக்கி இருந்தமையை சாதாரண நிலைக்கு கொண்டு வருவதற்காக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் மேற் கொள்ளப்பட்ட பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தள்ளது.
நேற்று முந்தினம் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் விஷேட சத்திர சிகிச்சை நிபூணரான மருதமுனையைச் சேர்ந்த டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம் அவர்களினாலே இச் சாதனை நிலை நாட்டப்பட்டுள்ளது.
கல்முனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்தச் சிறுவன் கல்முனையிலுள்ள வைத்திய சாலைஒன்றின் அனுசரனையுடன் கொழும்பு பொது வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டு சத்திர சிகிச்சைக்கான காலம் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு காலம் கடத்தப்பட்ட நிலையிலேதான் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையில் இச் சிறுவன் அனுமதிக்கப்பட்டு இந்த சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன அத்துடன் இவ்வாறான சத்திர சிகிச்சையை கொழும்பு தனியார் வைத்திய சாலைகளில் மேற் கொள்வதாயின் இரண்டு இலச்சத்துக்கு மேற்பட்ட பணம் செலவாகும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
இச்சத்திர சிகிச்சை தொடர்பாக இச்சிறுவனின் பொற்றோர்கள் கருத்து தெரிவிக்கையில் தனது பிள்ளைக்கு இந்த பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற் கொண்டு அவரை சாதாரண நிலைக்கு கொண்டு வந்ததுடன் தமது நீண்டகால துன்பகரமான நிலையிலிருந்து எம்மை பாதுகாத்தமைக்காக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலைக்கும் வைத்திய நிபூணருக்கும் நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்தனர்.
டாக்டர் ஏ.டபிள்யூ.எம்.சமீம்
0 comments:
Post a Comment