விதவைதப் பெண்ணையும் அவரது 20 வயதான மகளையும் திருமணம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட குறித்த நபரை அவிசாவளை பொலிஸார் எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
தெரனியாகலயைச் சேர்ந்த 29 வயதான நபரொருவர் தான் சாரதியாக கடமையாற்றும் கொஸ்கமையிலுள்ள பண்ணையொன்றில் பணிபுரியும் 44 வயதான விதவைப் பெண்ணை 6 வருடங்களுக்கு பின்னர் திருமணம் செய்துள்ளார்.
பின்னர் அந்நபர் தனது பெறாமகளையும் தாய்க்கு தெரியாமல் திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர் உண்மை தெரியவரவே குறித்த பெண்ணின் முறைப்பாட்டையடுத்து அந்நபரை அவிசாவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment