இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/28/2013

ரஷ்யாவில் விழுந்த எரிகல்லின் பெரிய பாகம் கண்டுபிடிப்பு


TN :ரஷ்யாவின் யூரல் மலைக்கு மேலாக பறந்து வந்து உறைந்த செபார்க்குல் ஏரிக்குள் மோதிய எரிகல்லின் பெரிய பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டு பிடிப்பு குறித்து தலைமை ஆய்வாளரான விக்டொர் குரோக்கோவ்ஸ்கி, விண்கல் விழுந்ததால் செபார்க்குல் ஏரியில் ஏற்பட்ட 25 அடி அகலமான குழியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 100ற்கும் அதிகமான துண்டுகளில் இதுவே மிகப் பெரியது எனத் தெரிவித்துள்ளார்.

கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கிலோ கிராம் நிறையுடைய பாகம் உட்பட எரிகல்லின் சிதறிய பாகங்கள் யூரல் மத்திய பல்கலைக்கழகத்தினால் சுமார் 30 பனிச்சறுக்கு வீரர்களின் உதவியுடன் 50 கிலோ மீற்றர் தூரம் வரை பயணித்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி 15ம் திகதி ரஷ்யாவின் செலையாபின்ஸ்க் நகர்ப் பகுதியில் தரையுடன் மோதும் முன் வெடித்துச் சிதறிய எரிகல்லில் இருந்து புறப்பட்ட அதிர்வலைகளால் 1200 பொது மக்கள் காயமடைந்தனர். இதனையடுத்து சுமார் 24,000 ஊழியர்களும் 4300 சிறு உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டு விண்கல் தாக்கத்தால் நிகழ்ந்த சேதத்தைத் துப்பரவாக்கினர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா