(ஹனீபா)
தேசிய சேமிப்பு வங்கியின் தேசத்துக்கு மகுடம் (தயட கிருள) தேசிய வெலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று தபால் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அதிபர்களுக்கான அறிவூட்டல் செயலமர்வு (10.02.2103) மாளிகைக்காடு பிரதான வீதியிலுள்ள 'பிஸ்மில்லா ஹெட்டல்' மேல் மாடியில் அம்பாறை மாவட்ட தபால் அத்தியட்சகர் ஜெகத்குமார தலைமையில் நடைபெற்றது.
தேசிய சேமிப்பு வங்கியின் அஞ்சல்கிளைகளினூடாக பொது மக்களுக்கு சிறந்த நிறைவான சேமிப்ப சேவையினை வழங்கும் நோக்குடன் அது தொடர்பான ஆறிவூட்டல்களை வழங்கும் முகமாகவே இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்படடிருந்தது.
இந்த செயலமர்வில் கிழக்கு மாகாண தபால் அத்தியட்சகர் கே.கனகரத்தினம், தேசிய சேமிப்பு வங்கியின் பொது முகாமையாளர் திருமதி ரீ.ஜீ.எம்.அருணா ஜெயசிங்க,மற்றும் அம்பாறை மாவட்டத்தின் சகல தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளினதும் முகாமையாளர்கள் உட்பட அஞ்சல் மற்றும் உப அஞ்சல் அதிபர்கள் பலரும் கலந்த கொண்டனர்.
இந்நிகழ்வின் போது கடந்த காலங்களில் கூடுதலான சேமிப்புக்களை மேற்கொண்ட உப தபாலதிபர்களுக்கு விஷேட ஊக்குவிப்புக் காசோலைகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment