BBC:சவுதி அரேபியாவில் கொள்ளையடித்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர் மீதான தண்டனை நிறைவேற்றம் சவுதி அதிகாரிகளால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த சமயம் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பலர் பால்ய வயதுடையவராகவே இருந்தார்கள்.
தண்டனை நிறைவேற்றம் ஏன் தள்ளிப்போடப்பட்டது என்பது தொடர்பில் முரணான அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இனி எப்போது தண்டனை நிறைவேற்றப்படும் என்பதற்கும் அறிகுறிகள் இல்லை.
மரண தண்டனையை எதிர்த்து வரும் மனித உரிமை அமைப்புகள் இந்த தண்டனையை நிறுத்த வேண்டும் என்று கோரியிருந்தன.
இந்த ஏழு பேரில் ஒருவரின் உடல் சிரச்சேதம் செய்யப்பட்டு அவரின் உடல் பகிரங்கமாக வைக்கப்பட இருந்தது. மற்றவர்களின் துப்பாக்கியால் சுடப்பட்டு சாகடிக்கப்பட இருந்தனர்.







0 comments:
Post a Comment