-ஹனீபா-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கலாசாரப் பிரிவு ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வும், விழிப்புணர்வு ஊர்வலமும் மத்தியமுகாம் பிரதேசத்தில் இன்று (08.03.2013) இடம்பெற்றது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாவிதன்வெளி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ் தலைமையில் ஆரம்பமான விழிப்புணர்வு ஊர்வலம் றாணமடு ஸ்ரீசித்திவினாயகர் ஆலய முன்றலிலிருந்து ஆரம்பமாகி மத்தியமுகாம் நகர் வரை சென்றது.
இதில் கலந்து கொண்ட மகளிர்கள், பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களுக்கு சமவுரிமை கொடு, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்போம், எனும் வாசகங்களை தாங்கிய சுலோகங்களை எந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
0 comments:
Post a Comment