இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/29/2013

சுவீடனில் முதல் முறை அதான் ஒலி


சுவீடனில் முதல் முறையாக ஒலிபெருக்கியூடே தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்டுள்ளது.

சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமி லுள்ள பித்ஜா பெரிய பள்ளிவாசலின் மினாரத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கான அதான் ஒலிக்கப்பட்டது. “இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினம்” என 13 ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்ற இமான் உப்மான் என்ற சுவீடன் நாட்டவர் தி வேல்ட் புல்லடின் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார்.

ஸ்டொக்ஹோம் புறநகர் பகுதியில் இருக்கும் பித்ஜா பள்ளிவாசலில் அதான் ஒலிக்க கடந்த ஏப்ரலில் பொலிஸார் அனுமதி அளித்தனர். இதில் வெள்ளிக்கிழமை தினங்களில் நண்பகல் 12 முதல் ஒரு மணிக்குள் மூன்று முதல் ஐந்து வினாடிகள் வரையான காலத்தில் அதான் ஒலிக்கவே பொலிஸார் அனுமதி அளித்தனர்.

சுவீடனில் மினாரத்துடன் அமைக்கப் பட்டிருக்கும் ஒரே பள்ளிவாசலான பித்ஜா பள்ளிவாசலில் அதான் ஒலிக்க முஸ்லிம் சமூகத்தினர் அனுமதி கோரியதை அடுத்தே பொலிஸார் இதற்கான அனுமதியை வழங்கினர்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பித்ஜா பெரிய பள்ளிவாசலின் இமாம் ஒலிபெருக்கியூடே முதல் முறையாக அதான் சொல்வதை அந்நாட்டு அரச தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்பியது.

“நான் சுவீடனில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறேன். ஆனால் ஒலிபெருக்கியூடே அதான் ஒலி கேட்டது இது தான் முதல் முறை. நான் பெரு மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்” என குலுஸ் கைஹான் என்ற பெண் துருக்கி பிரஸ் செய்திச் சேவைக்கு ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தார்.

தொழுகைக்காக 5 நேரங்கள் அதான் அழைப்பது குறித்து மேற்கு நாடுகளில் தொடர்ந்து தடங்கல்கள் இருந்து வருகின்றன. ஒலிபெருக்கியூடான அதான் ஒலி குடியிருப்பாளர்களுக்கு இடையூராக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

ஒன்பது மில்லியன் சனத் தொகை கொண்ட சுவீடனில் 450,000 தொடக்கம் 500,000 முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் 2011 இல் வெளியிட்ட தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா