இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/20/2013

பலாத்காரம் செய்ததாக லொகேஷன் மேனேஜரா மீது நடிகை புகார்


சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த மாடலிங் ரெமோலா (21), பிடெக் ஏர்கிராப்ட் படித்தவர். அவர், புதுவை வடக்கு எஸ்பி ராமராஜூவை நேற்று சந்தித்து அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, 

நான் மாடலிங் செய்து வருகிறேன். புதுவை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த குமரன் என்ற ராஜா (46) என்பவருடன் செல்போன் மூலம் தொடர்பு ஏற்பட்டது. 

தான் சினிமா துறையில் லொகேஷன் மேனேஜராக இருப்பதாகவும், தனது மனைவி அதிக பண பேராசை பிடித்தவள், அதனால் தன்னை உதாசீனப்படுத்துவதாகவும் கூறினார். 

இதனால் தனது மனைவியை விவாகரத்து செய்ய ஏற்பாடு செய்து விட்டதாகவும் தெரிவித்தார். 

முதலில், அவரது காதல் மற்றும் திருமண ஆசைக்கு இணங்க மறுத்தேன். ஆனால், எனது தனிமையை தெரிந்து கொண்டு, எனக்கு நீ மனைவியாக, வாழ்க்கை துணைவியாக இறுதிகாலம் வரை இருக்க வேண்டுமென வற்புறுத்தினார். 

இல்லையெனில் தற்கொலை செய்து கொள்ள போவதாக அழுது புலம்பினார். எனவே நானும் அவரை மனப்பூர்வமாக நேசிக்க ஆரம்பித்தேன். 

கடந்த மாதம் 10ம் திகதி, செல்போனில் தொடர்பு கொண்ட அவர், உடல்நிலை சரியில்லை என்றும், உன்னை சந்திக்காமல் இருந்தால் நான் செத்து விடுவேன் என்றார். 

அதற்கு நான் நேரில் சந்திக்க வருவதாக உறுதியளித்தேன். அதன்படி, கடந்த 22ம் திகதி புதுவை வந்தேன். அவர் என்னை ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்க வைத்தார். அப்போது, என் விருப்பம் இன்றி என்னை பலாத்காரம் செய்தார். 

அங்கு தங்கியிருந்த 3 நாட்களும் என்னை அனுபவித்தார். திருமணம் குறித்து பேச ஆரம்பித்ததும், என்னை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். 

கொலை செய்து விடுவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். எனவே, குமரன் என்கிற ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. 

மனுவை பெற்றுக் கொண்ட எஸ்பி, அதை புதுவை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். மகளிர் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மாடலிங் பெண்ணின் புகாருக்கு மறுப்பு தெரிவித்து குமரன் கூறியதாவது, ‘என் மீது புகார் கூறிய ரெமோலா, சினிமாவில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கித்தர கேட்டு என்னை அணுகினார். அவர் பத்திரிகைகளுக்கு கொடுத்துள்ள புகைப்படம், புதுவையில் சூட்டிங் நடக்கும்போது, சான்ஸ் கேட்டு வந்த சமயத்தில், ரோட்டோரத்தில் என்னுடன் எடுத்துக் கொண்டது. 

மற்றபடி அவர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். எனது வளர்ச்சி பிடிக்காதவர்களின் தூண்டுதலின் பேரில் இந்த பொய் புகாரை அவர் கொடுத்துள்ளார்’ என்றார். 

இதற்கு ரெமோலா கூறியதாவது, 

நான் பொய் புகார் கொடுத்துள்ளதாக குமரன் கூறியுள்ளார். தற்போது நான் வெளியிட்டுள்ள போட்டோ ஆதாரங்கள் சிறிதுதான். இன்னும் நெருக்கமான வீடியோ, போட்டோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும்,அதனை நீதிமன்றத்தில் வெளியிடுவேன் என்றும் கூறினார்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா