இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/27/2013

கொழும்பிலிருந்து யாழ்நகர் வந்த சிறுமியை கடத்திச் செல்ல முயற்சி


யாழ் நகர்ப் பகுதியில் 4 வயதுச் சிறுமியை கடத்த முற்பட்ட இளைஞனை, நகர்ப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் யாழ்.மத்திய பஸ் நிலையத்தில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;

அச்சுவேலியில் இருக்கும் தங்கள் உறவினரைச் சந்திப்பதற்காக கொழும்பிலிருந்து இந்தச் சிறுமியும் அவரது பெற்றோரும் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர்.
பஸ்ஸிலிருந்து தமது இரு பெண் பிள்ளைகளையும் இறக்கிவிட்டு பஸ்ஸிற்குள் இருந்த பொருட்களை எடுக்கச் சென்ற வேளை பஸ்ஸிற்கு அருகில் நின்ற சிறுமியை இளைஞர் ஒருவர் தந்திரமாக பஸ் நிலையத்தின் பின்புறமாக உள்ள கடைத்தொகுதியூடாக கூட்டிச் செல்ல முற்பட்ட வேளை பஸ்ஸிலிருந்து பொருட்களுடன் இறங்கிய தாயார் எதேச்சையாகக் கண்டு அவலக்குரல் எழுப்பியுள்ளார். 

இந்நிலையில், பஸ் நிலையத்தின் அருகில் பாதுகாப்புக் கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பட்டு நிலைமையை அறிந்து அந்த இளைஞனைக் கைது செய்ய முற்பட்டபோது, அவ்விளைஞன் பஸ் நிலையத்தில் நின்ற மக்கள் கூட்டத்திற்குள் தப்பி ஓடியுள்ளார்.

எனினும் சிறுமியைக் கடத்த முற்பட்ட இளைஞனிடமிருந்துசிறுமியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்த பொலிஸார், தப்பி ஓடிய இளைஞனை பின்தொடர்ந்து துரத்திச் சென்று அவரை பழைய தபால் கந்தோர் வீதியில் வைத்து மடக்கிப் பிடித்து கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா