சுவாசிலாந்து மன்னர் என்னை 14வது மனைவியாக்க துடிக்கிறார், எனக்கு புகலிடம் தாருங்கள் என்று பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார் அழகிய பெண்ணான நகோபெனி.
சுவாசிலாந்து நாட்டை சேர்ந்த மன்னர் 3வது மெஸ்வதி. இவருக்கு ஏற்கனவே 13 மனைவிகள் உள்ளனர்.
இந்நிலையில் 22 வயது பெண்ணான நகோபெனியை திருமணம் செய்து கொள்ள துரத்திக் கொண்டிருக்கிறாராம், அவரது 15வது வயது முதலே மனைவியாக்க துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
சுவாசிலாந்தை பொறுத்த வரையில் மன்னர் சொல்வது தான் சட்டம், அவரை மீறி அங்கு ஒன்றும் செய்ய இயலாது என்பதால் பிரிட்டன் தப்பி வந்துவிட்டார் நகோபெனி.
45 வயதாகும் இந்த மன்னர், வருடா வருடம் திருமணம் செய்ய அந்த நாட்டு ராஜ பாரம்பரியம் இடம் கொடுத்துள்ளதாம்.
இது குறித்து நகோபெனி கூறுகையில், மெஸ்வதியை திருமணம் செய்து கொள்ள நான் விரும்பவில்லை. அவரது மனைவிகளை தனி அரண்மனையில் சிறைக் கைதிகள் போல வைத்துள்ளார்.
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே ஷாப்பிங் செய்வதற்காக பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு அனுப்புவார் மெஸ்வதி.
மன்னரின் தொடர் துரத்தல் காரணமாகவே நான் எனது நாட்டை விட்டு பிரிட்டன் வந்தேன்.
தற்போது பிர்மிங்காமில் வசித்து வருகிறேன். இங்கு எனது தாயார் உள்ளார்.
அவர் எனது தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் எனக்கு முன்பே பிரிட்டன் வந்து விட்டார்.
நான் தற்போது அரசியல் புகலிடம் கோரியுள்ளேன், என்னை சுவாசிலாந்துக்கு திருப்பி அனுப்பினால் கொன்று விடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment