(ஹனீபா)
இலங்கையின் 41வது குடியரசு தினத்தையிட்டு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்ததுக்கு அமைவாக இன்று (22) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் குடியரசு தின நிகழ்வுகள் சம்மாந்துறைப் பிரதேச செலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் குடியரசு தினம் தொடர்பான விளக்க உரைகள் இடம் பெற்றது அத்துடன் குடியரசின் உருவாக்கத்துக்கு உழைத்த தலைவர்கள் நினைவு கூறப்பட்டதுடன் அவர்களுக்கான பிராத்தனைகளும் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல்லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார் உட்பட உத்தியோகத்தர்கள அனைவரும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment