பனாமா நாட்டைச் சேர்ந்த 64 வயதான நபரொருவர் வேகமாக தேங்காய் உரித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்க முயற்சித்து வருகின்றார்.
பனாவின் தலைநகரில் வசிக்கம் 64 வயதான அன்ரிஸ் கார்டின் என்ற நபரே இவ்வாறு உலக சாதனை படைக்க முயற்சித்து வருகிறார்.
இது குறித்து கார்டின் கூறுகையில், நீங்கள் நினைப்பது போன்று பல்லினால் தேங்காய் உரிப்பது சாதாரண விடயமல்ல. அதற்கு உறுதியான தடையும் பல்லும் வேண்டும். மேலும் கடவுளின் உதவியும் வேண்டும்.
தற்போது தன்னால் 500 தேங்காய்களை 6 மணித்தியாலங்களில் முழுமையாக உரிக்க முடியும். இது சாதனை படைக்க போதுமானது. எனவே ஒரு நாள் நான் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
இச்சாதனையை நிலைநாட்டுவதற்காக சுமார் 50 வருடங்களாக 100 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேங்காய்களை உரித்து பயிற்சி எடுத்துள்ளாராம் கார்டின்.
பயிற்சிக்கா இவர் தேங்காய் உரிப்பதை பலரும் கூடி வேடிக்கை பார்த்து புகைப்படமும் எடுத்து வருகின்றனர்.
அவர்கள் கார்டினின் முயற்சி பற்றி கூறுகையில், வேலைகள் இன்றி வீட்டில் இருக்க ஆசைப்படும் இந்த வயதில் இவரின் முயற்சியை பாராட்டாமல் இருக்க முயவில்லை என தெரிவிக்கின்றனர்.
Bas MN
0 comments:
Post a Comment