இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/04/2013

கர்ப்பப் பை இல்லாத பெண் கர்ப்பம்

உலகிலேயே முதல் முறையாக கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சையை செய்துகொண்ட துருக்கி நாட்டு பெண் 2 ஆண்டுகள் கழித்து கர்ப்பமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

'தெர்யா' என்ற பெண் பிறக்கும்போதே கர்பப்பை இல்லாமல் பிறந்துள்ளார். இந்நிலையில், இவருக்கு துருக்கி நாட்டின் தென் மாகாணத்திலுள்ள அக்டெனிஸ் போதனா வைத்தியசாலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அதாவது இறந்த பெண்ணொருவரின் கர்பப்பை இவருக்கு பொருத்தப்பட்டது.

அதன்பின்பு இப்பெண்ணுக்கு சோதனைக் குழாயின்மூலம் குழந்தைபேறுக்கான முயற்சிக் மேற்கொள்ளப்பட்டதுடன் தற்போது அந்த முயற்சி வெற்றியடைந்து.

'தெர்யா ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைக் குழாய் கருத்தரிப்பு முயற்சி வெற்றியடைந்துள்ளது. அவர் தாய்மையின் ஆரம்பநிலையில் இருக்கிறார். எல்லாம் வெற்றியடையும்' என அவரது வைத்தியர் முஸ்தபா உனால் கூறியுள்ளார்.

5000இல் ஒரு பெண் பிறவியிலேயே கர்ப்பப்பை இன்றி பிறப்பதாக அறிவியல் ஆதாரங்கள் கூறுகின்றன.

கடந்த 2000ஆம் ஆண்டில் சவூதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கர்ப்பப் பை மாற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.
 ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதனால் 90 நாட்களில் அதை எடுக்க நேரிட்டது. இந்த நிலையில் தெர்யாதான் உலகிலேயே முதன் முதலில் வெற்றிகரமாக கர்ப்பப் பை பொருத்தப்பட்ட பெண் என்ற பெயரைப் பெற்றார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா