இங்கிலாந்து அணியின் முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரரான டேவிட் பெக்கம் உலக கால்பந்து அரங்கிலிருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். 1992ஆம் ஆண்டு தனது 17ஆவது வயதில் கால்பந்து அரங்கில் நுழைந்த பெக்காம் 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசிய அணியில் இடம்பிடித்து பின்னாளில் தலைவரானார்.
2009ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசிய கால்பந்து அணியிலிருந்து விலகினார் பெக்கம். ஆனால் தொடர்ந்தும் பல்வேறு கழக அணிகளுக்காக விளையாடிவந்தார். இந்நிலையில் தற்போது அனைத்து வகையான போட்டிகளிலிருந்தும் நடப்பு பருவகால போட்டிகளுடன் ஓய்வுபெறப் போவதாக 38 வயதான பெக்கம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 21 வருட கால தொழில்முறை உதைபந்தாட்ட வாழ்க்கையை முடிவுக்குகொண்டு வருகிறார் டேவிட் பெக்கம். உதைபந்தாட்டத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தது போல சிகை அலங்காரத்தின் மூலம் ஏராளமான ரசிகர்கொண்டிருக்கிறார் டேவிட் பெக்கம்.
0 comments:
Post a Comment