ஈரான் ஜனாதிபதி தேர்தலில் பெண்களுக்கு போட்டியிட முடியாது என அந்நாட்டு அரசியலமைப்புக்குழு குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் 14ம் திகதி நடைபெறவுள்ள ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 30 பெண்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனால் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தேர்தலில் பெண்கள் போட்டியிடுவது தடுக்கப்பட்டிருப்பதாக போஷசகர் கவுன்ஸிலின் உறுப்பினர் மொஹமட் யஸ்டி குறிப்பிட்டுள்ளார். இந்த கவுன்ஸிலே வேட்பாளர்கள் தொடர்பாக இறுதி தீர்மானத்தை எடுக்கிறது.
ஈரான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட 686 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யப் பட்ட போதும் குறைந்த அளவானோரே போட்யிட தகுதி பெறுவார்கள். அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் விபரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட வுள்ளது.
0 comments:
Post a Comment