கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி
மேயர் அசாத் சாலி கைதுசெய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டமைக்கு
எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று (28)
திரும்பபெறப்பட்டது.
அசாத் சாலி தற்போது விடுதலை
செய்யப்பட்டுள்ளதாக மனுவை திரும்ப பெறுவதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி
ஜே.சி வெலியமுன உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதனடிப்படையில்
மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கே.ஸ்ரீபவன், சலிம் மர்சுக், பியசாத் டெப்
ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு
எடுக்கப்பட்டது. காவற்துறை மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்
பணிப்பாளர் உள்ளிட்டோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்தியாவின்
சென்னை நகரில் வெளியாகும் பத்திரிகை ஒன்று வழங்கிய போட்டியில் வெளியிட்ட
கருத்துக்கள் காரணமாக அசாத் சாலி, புலனாய்வுப் பிரிவினரால் கொலன்னாவ
பிரதேசத்தில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்டார். அவர் தடுப்பு காவல்
உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த
போது, சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா இந்த அடிப்படை உரிமை மனுவை
உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
Bas VI
0 comments:
Post a Comment