(சமூகத்தேடல் அமைப்பு)
அரச வைத்தியசாலை முஸ்லிம் பெண்களின் சீருடையில் கைவைக்கும் ஜாதிக்க ஹெல உரிமய
தங்கள் சீருடைகளை மாற்றுவதன் மூலம் நாட்டில் பொது சட்டதை மீறும் முஸ்லிம் பெண்கள் தண்டிக்கப்பட வேண்டும், என்று ஜாதிக்க ஹெல உரிமை கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார் ,என்று சிங்கள, ஆங்கில ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன .மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது , அதிகாரிகள் இதன் ஆபத்தை விளங்கி கொள்ள வேண்டும். இது தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முன், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ,இது இஸ்லாமிய தீவிரவாதம் முழு நாட்டையும் சூழ்ந்து கொள்ள அனுமதித்து விடும் என்றும் தெரிவித்துள்ளார்.புத்தளத்தில் மருத்துவ நிறுவனங்களிலும். மற்றும் கற்பிட்டி வைத்தியசாலையின் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் தமது சீருடையை மாற்றியுள்ளதாகவும் அது தொடர்பில் ஜாதிக ஹெல உரிமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப் பட்டுள்ளது .
அதே போல் யாழ் தாதியர் கல்லூரி முஸ்லிம் மாணவிகள் தங்களது பயிற்ச்சி நேரம் தவிர்ந்த சமூக வேலைகளுக்கு வெளி இடங்களுக்கு செல்லும்போது ஹிஜாப் அணிந்து செல்வதை வழக்கமாக்கி சென்று வந்தனர். இப்போது அவ்வாறான ஒரு முறையையும் அதன் அதிபர் இல்லாதொழித்து பொது பல சேனாவுக்கும் தனக்கும் உள்ள நேரடித்தொடர்பை நிரூபித்துள்ளார்.
அக்கல்லூரி தவறுகளை கண்டறியும் மாணவ மாணவிகளை பரீட்சைகளில் fail ஆக்குவதையும் யாழ் தாதியர் கல்லூரி வழாகமும் அதிபரும் கொண்டுள்ளனர் விசேடமாக இவ்வாறன நடவடிக்கைகளுக்கு பலிக்கேடாகுபவர்கள் கிழக்கு மாகாண மாணவ மாணவிகளே! குறிப்பாக அங்கு நடக்கும் அநீதிகளை விடுதி மாணவர்கள் ஆதார பூர்வமாக நிரூபித்து விடுவார்கள் என்பதற்காக பல மயில்கள் தாண்டி குடும்பத்தை தியாகம் செய்து அங்கு சென்றிருக்கும் மாணவிகளுக்கு கைய்யடக்க தொலை பேசி பாவனைக்கும் தடை விதித்துள்ளதுடன் , விடுதியில் வழங்கப்படும் சாப்பாட்டினை அதன் அதிபர் ஒரு நாளைக்கு சாப்பிட்டு பாக்கட்டும் அன்றையோடு சாப்பாடே வெறுக்கும் என்றளவுக்கு மாணவர்களின் சாப்பாட்டு நிலை மோசமாக உள்ளதாம், இத்தாதியர் கல்லூரி அதிபராலும் அங்குள்ள ஏனைய ஆசான்களாலும் அரங்கேறும் மாணவ மாணவிகளுக்கு எதிரான அநீதிகளை வெளியிட al -jazeera தொலைகாட்சி ஆதாரங்களை புரட்டிய வண்ணம் உள்ளது என்பதும் ஒரு அதிசய தகவலாகும். இவ்வாறன பிரச்சினைகள் வெளி நாட்டு ஊடகங்களுக்கு சென்று எமது நாட்டின் மானத்தை விற்பதை விட இது தொடர்பாக அரசியல் வாதிகள் நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாட்டில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களில் உள்ள அரச வைத்தியசாலைகளிலும் மற்றும் ஏனைய வைத்திய சாலைகளிலும் முஸ்லிம் பெண் டாக்டர்கள் மற்றும் , தாதிமார் , ஊழியர்கள் ஹிஜாப் அணித்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
புத்தளத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்தாலும் ,அரச வைத்தியசாலைகள் போன்ற இடங்களில் கடமைபுரியும் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாமிய உடை ஹிஜாப் தடை விதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு 2012 பெப்ரவரி மாதம் வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஆப்தீன் எஹியா புத்தளம் மாவட்டம், புத்தளம், கல்பிட்டி, மாம்புரி போன்ற பிரதேச வைத்தியசாலைகளில் கடமையாற்றும் முஸ்லிம் பெண் சிற்றூழியர்கள் ஹிஜாப் இஸ்லாமிய உடையினை தமது கடமை நேரத்தினுள் அணிய அனுமதிக்க வேண்டும் என்று கோரும் விஷேட அறிக்கை ஒன்றினைச் வடமேல் மாகாண சபையில் சமர்ப்பித்திருத்தார் .
அதை தொடர்ந்து கடந்த ஆண்டு 2012 மார்ச் மாதம் ஹிஜாப் தொடர்பான தடையை வடமேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எ.எம்.கமருதீன் மாகாண சபையின் சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சர் அசோகா வடிவமங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்திருத்தார் .
இந்த நிலையில் அமைச்சர் அசோகா வடிவமங்க வடமேல் மாகாணத்தின் வைத்தியசாலைகளில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கும்படி உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .இந்த நிலையிலேயே ஜாதிக்க ஹெல உரிமய இதை தெரிவித்துள்ளது .
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பரவலாக எல்லா வைத்திய சாலைகளிலும் முஸ்லிம் பெண்கள் ஜிஹாப் அணித நிலையில் பல ஆண்டுகளாக கடமை புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .முஸ்லிம் பெண் தாதிமார் , மற்றும் ஊழியர்கள் வெள்ளை சல்வார் கமீசுடன் வெள்ளை ஹிஜாப் அணிந்து கடமையில் ஈடுபட்டு வருகின்றமை சுட்டிக் காட்டத் தக்கது.

0 comments:
Post a Comment