பொது மன்னிப்பின் பேரில் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சவூதி அரசு பொது மன்னிப்பு வழங்கியதுடன் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக சவூதி தொழில் அமைச்சு ஏப்ரல் 26ஆம் திகதி முதல் ஜுலை 3ஆம் திகதி வரையிலான மூன்று மாத கால அவகாசமும் வழங்கியுள்ளது.
இதன்படி, சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் சுமார் 300 இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை விநியோகிப்பதற்கு ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மேற்படி தூதரகம் அறிவிக்கின்றது.
Bas VI
0 comments:
Post a Comment