இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/06/2013

சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவிலிருந்துதான் மிகவும் கூடுதலான விபத்துக்கள் நிகழ்கின்றன


(ஹனீபா)
சாரதிகளினதும் பாதசாரிகளினதும் பொறுப்புணர்வற்ற போக்குவரத்து நடைமுறைவிதிகளினாலும் செயற்பாடுகளிலும் மனிதர்களுடைய பெறுமதிமிக்க உயிர்கள் பரிதாபகரமான முறையில் காவு கொள்ளப்படுவதுடன், உடல் உறுப்புக்களையும் இழந்து வருகின்றனர் என அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகரும் முன்னாள் பொலிஸ் ஊடக பணிப்பாளருமான சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட வீதி போக்குவரத்துப் பிரிவின் அனுசரனையுடன் சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் சமுக பொலிஸ் பிரிவின் ஏற்பாட்டில் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வீதி விபத்துக்களும் அதனை எதிர்காலத்தில் குறைப்பது தொடர்பாகவும் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் தலைவர்கள், நிர்வாகிகள், நம்பிக்கையாளர் சபையினர், உலமா சபையினர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று (05) மாலை சம்மாந்துறை பொலிஸ் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற பேதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இங்குதொடர்ந்து உரையாற்றுகையில் இலங்கையில் 431 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன இந்தப் பொலிஸ் நிலையங்களின் போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுகளிலிருந்து பொற்றுக் கொள்ளப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவிலிருந்துதான் மிகவும் கூடுதலான விபத்துக்களும் மரணங்களும் இடம் பெற்றுள்ளமை பதிவாகியுள்ளன.

கடந்த 2012ம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் வீதி விபத்தினால் 64 பேர் மரணித்துள்ளனர் இவற்றில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் மாத்திரம் 16 பேர் உயிரிழந்துள்ளனர் இதே போன்று கடந்த ஆறு ஆண்டகளில் அதாவது 2007-2012 வரையான காலப்பகுதியில் இலங்கையில் வீதி விபத்துக்களினால் 42088 வித்துக்கள் இடம் பெற்றுள்ளது இவற்றில் 2425 பேர் மரணித்துள்ளனர் பல ஆயிரக் கணக்கானோர் ஊணமுற்றுள்ளனர் இலங்கை மட்டத்தில் மரணித்தவர்களின் தொகையில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவில் மாத்திரம் மிகவும் கூடுதலாக 92 பேர் உயிரிழந்தள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதனால் எமது மக்களுடைய பெறுமதியான உயிர்கள் பறிக்கப்படுகின்றன இதனால் எமது நாட்டின் கல்விமான்கள், புத்தி ஜீவிகள், எதிர்கால எமது நாட்டின் தலைமைகள் இல்லாமல் செய்யப்படுகின்றனர் இது எமது நாட்டுக்கு பல வழிகளிலும் பாரிய இழப்பாகும இந்த வீதி விபத்துக்கள் விடயத்தில் நாம் ஒவ்வொருவரும் பொறுப்புள்ளவர்களாக செயற்பட்டு இதனை குறைக்க வேண்டும்.

இதனைக் கருத்தில் கொண்டு நான் இந்தப் பிரவுக்குரிய கடமைகளைப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் ஆகின்றன அதற்குள் இந்த மாவட்டத்தில் பலதரப்பட்ட வகையில் நடவடிக்கைகள் மேற் கொண்டு இதனைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அவ்வாறு சட்டநடவடிக்கைகளுக்கு அப்பால் ஆத்மீக ரீதியாக இங்கு வருகை தந்துள்ள உங்களது உதவியுடன் ஜூம்மாவின் போதும் பள்ளிவாசல்களில்; மூலமாக மக்களுக்கு விளிப்பூட்டல் செய்வதன் மூலம் எமது மக்களின் உயிர்களை பாதுகாக்க முடியும் என நான் நம்புகின்றேன் அதற்கு உதவ வேண்டும் உதவுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் எனவும் கேட்டுக் கொண்டார்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சம்சுதீன் தலைமையில் நடை பெற்ற இக் கூட்டத்தில் சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறை, வளத்தாப்பிட்டி, மஜீட்புரம்;, நெய்னாகாடு ஆகிய பிரதேசங்களின்இக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி அஜித் றோஹன, அம்பாறை மாவட்ட போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பண்டார, சம்மாந்துறை பிரஜா பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எல்.அமீர், சம்மாந்துறை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விபத்துக்கள் தொடர்பான பல்வேறு விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் வாகன பொக்கவரத்துப் பிரிவினால் நாட்டின் பல பாகங்களிலும் இடம் பெற்ற விபத்துக்கள் தொடர்பான படங்களும் காண்பிக்கப்பட்டன.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா