இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/12/2013

விபத்தில் ஊடகவியலாளர் பலி


கொள்ளுபிட்டி பொலிஸ் பிரிவில் கடற்கரை பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த அனுஸ்க இந்திரஜித் பெனாண்டோ என்ற ஊடகவியலாளர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
அனுஸ்க இந்திரஜித் பெனாண்டோவிற்கு வயது 27 ஆகும். இவர் கந்தான – ஹல்பேமாவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.
விபத்தை அடுத்து முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா