இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/11/2013

குவைத்தில் இலங்கை பணிப்பெண் தற்கொலைக்கு முயற்சி


அதிக மாத்திரைகளை உண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த இலங்கை பணிப்பெண் ஒருவர் குவைத்தின் - மஹ்போல் அதான் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

தனது வீட்டில் பணிபுரிந்த பெண் அறையில் மயங்கி கிடந்ததையும் அவருக்கு அருகில் மாத்திரைகள் கிடப்பதையும் கண்ட வீட்டு உரிமையாளர் உள்துறை அமைச்சின் செயற்பாட்டு பிரிவுக்கு அறிவித்துள்ளார். 

உடனே அவ்விடத்திற்கு வந்த உள்துறை அமைச்சின் அதிகாரிகள் பெண்ணை அதான் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். 

குறித்த பெண்ணின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து குவைத் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா