(ஹனீபா)
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு அக்கரைப்பற்று 3வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி ஹரீன் பெரேராவின் ஏற்பாட்டில் இலங்கை நற்குண முன்னேற்றக் கழகத்தின் அனுசரனையுடன் இலவச துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று மாலை (30) சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியாலய அஷ;ரப் ஞாபகாத்த மகாபொல மண்டபத்தில் கட்டளைத் தளபதி ஹரீன் பெரேராவின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம அதீதியாக கிழக்கு மாகாண இரானுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா கலந்து கொண்டார்.
அதிதிகளாக இலங்கை நற்குண முன்னேற்றக் கழகத்தின் தேசிய தலைவர் குசில் குணசேகர, சம்மாந்துறைப் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல், 631வது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேர்ணல் பீ.ஜே.பீ.கமகே, 632வது படைப்பிரிவின் கட்டளை தளபதி டபிள்யூ. கீர்த்தி குணசோம, கேர்ணல் ஹேரத் உட்பட அதிபர்கள், மாணவர்கள் பலரும்; கலந்து கொண்டனர்.
இந்த வைபவத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேச பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ்,சிங்கள,முஸ்லீம் மாணவர்கள் 105 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அதிதிகளால் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment