(ஹனீபா)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின்கீழ் இயங்கி வருகின்ற சமுர்த்தி வங்கிகளில் அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச செயலகப்பிரிவில் இயங்கி வருகின்ற ஹிஜ்றா சமுர்த்தி வங்கி கடந்த 2011ம் ஆண்டு அம்பாறை மாவட்ட மட்டத்தில் வறிய மக்களுக்கு சிறந்த சேவை வழங்கியதுடன் அம்பாறை மாவட்டத்தில் தேறிய இலாபமீட்டலில் 1வது இடத்தினை பெற்றுக் கொண்டமையினைக் கௌரவிக்கும் வகையில் ஹிஜ்றா சமுர்த்தி வங்கியின் வங்கி மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களைக் பாராட்டிக் கௌரவிக்கம் நிகழ்வு நேற்று (29) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சம்மாந்துறை சமுர்த்தி மகாசங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வைபவம் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலாளர் திரு நீர் டி அல்வீஸ் கலந்து கொண்டார்.
கொளரவ அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார், உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உட்பட ஏனைய வர்த்தக வங்கிகளின் உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், வங்கிகளின் கட்டப்பட்டுச் சபைகளின் தலைவர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இவ்வைபவத்தில் அதிதிகளால் உத்தியோகத்தர்களுக்கு நிணைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment