அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமராக கெவின் ரூட் இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியில் தலைமை பதவியில் அதிரடி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. பிரதமராக இருந்த ஜூலியா கில்லார்டு பதவி பறிக்கப்பட்டு அவருடைய பரம எதிர்ப்பாளராக இருந்த கெவின் ரூட்(55) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை அடுத்து கெவின் ரூட் இன்று காலை கான்பெராவில் உள்ள அரசு மாளிகையில் நடைபெற்ற விழாவில் புதிய பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு கவர்னர் ஜெனரல் குயின்டின் பிரேய் பதவி பிரமாணம் செய்து வைத்தார். துணை பிரதமராக அந்தோணி அல்பானிசே, நிதி மந்திரியாக கிறிஸ் போவென் ஆகியோரும் நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் வரும் செப்டம்பர் மாதம் 14–ம் திகதி பொதுத்தேர்தல் நடக்க இருந்தது. ஜூலியா கில்லார்டு பதவியில் நீடித்தால் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பதாலேயே அவர் ஓரம் கட்டப்பட்டு விட்டதாக தெரிகிறது.
இதனால் அவர் இனி பின்வரிசையில் அமருவார். புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ள கெவின் ரூட் தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளார்.
எனவே ஆகஸ்ட் 3–ம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.







0 comments:
Post a Comment