(ஹனீபா)
இந்த நாட்டின் எந்தவெரு நிகழ்வை எடுத்துக் கொண்டாலும் அத்தவிடயத்தில் ஊடக வியலாளர்களின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கின்றது அவர்களின் பணி மகத்தானது என கிழக்கமாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசனம், வீடமைப்பு கிராமிய மின்சார மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
தேசிய சுதந்திர ஊடக கலாசார ஒன்றியத்தினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட ஊடகவியல் ஒளுக்க நெறி தொடர்பான இரு நாள் செயலமர்வின் இறுதி நாள் நிகழ்வு நோற்று (23) பொத்தவில் அறுகம்பை ஹங்லூஸ் ஹெட்டலில் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் இன்று நாம் பொத்துவில் பிரதேசத்துக்கு வருகை தந்து எமது பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டிருப்பதுடன் இந்தப்பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் இறுக்கமான முறையில் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம்.
கடந்த சிலவருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் அனுபவித்த கோரச் சம்பவங்களை இன்று நாம் நினைக்கின்ற போது மெய்சிலிக்கின்றது அந்த நிலையினை எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களின் பெரும் பிரயத்தனத்தினால்; இல்லாமல் செய்யப்பட்டுள்ளன. இன்று நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக கூடுதலான கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன அந்த வகையில் கிழக்க மாகாணத்தில் எனக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டு எந்தவித வேறுபாடுகளும் இல்லாமல் சகல பகுதிகளுக்கும் பணங்களை ஒதுக்கி அபிவிருத்தி செய்து வருகின்றோம் விNஷடமாக பொத்துவில் பிரதேசத்துக்கு கூடுதலான பணங்களில் அபிவிருத்தி நடைபெற்று வருகின்றது.
இந்த விடயம் ஊடகவியலாளர்களான உங்களக்கு நன்கு தெரியும் அவற்றில் உங்களது மகத்தான பணியும் உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேசிய சுதந்திர ஊடக கலாசார ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ஜவ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்பாளர் ஏ.பி.தாவூத், பொத்தவிரல் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.ம்.வாசீத், வளவாளர்களான தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், சிரேஷ;ட ஊடகவியலாளர் இரா செல்வராஜா, சட்டத்தரணி எம்.எம்.பஹீஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.









0 comments:
Post a Comment