இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/11/2013

சம்மாந்துறையில் முறன்பாடு,நல்லிணக்கம் தொடர்பான செயமர்வு Photos

(ஹனீபா)
அரச பணங்கள் வீண் விரயம் செய்யப்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளவும் தாம் முன்னெடுக்கும் திட்டங்களின் பூரணத்துவத்தை அடைந்து கொள்ளவும்; அரச நிறுவனங்களுக்கு சரியான திட்டமிடல் அவசியமாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தார்.

முறன்பாடுகளுக்கிடையிலான நல்லிணக்கம் தொடர்பாக சம்மாந்துறைப் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள், கிராமோதைய சபைத் தலைவர்கள், மகளிர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பொதுநல அமைப்புக்களின் தலைவர்களுக் கிடையில் இன்று (11) செவ்வாய்கிழமை சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செயமர்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தொடர்ந்து உரையாற்றுகையில் யுத்தம் நிறைவடைந்த சுமார் 5வருட காலப் பகுதியில் கிழக்கு மாகாணம் பல துறைகளிலும் அபிவிருத்தி கண்டு வருகின்றது வீதி அபிவிருத்திகள்,மின்சாரம், நீர்பாசனம் போன்ற உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களில் அபிவிருத்தி கண்டு வருகின்றது.

ஆகவேதான இவ்வாறான அபிவிருத்தி திட்டங்களை பிரதேச செயலகங்கள் மூலம் முன்னெடுக்கும் போது சில முன்னுரிமை அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வேண்டும் இதனால் பிரதேசத்தில் முறன்பாடுகள் தோன்றாமல் பணிகளை முன்னெடுக்க முடியும் இதனை முன்னெடுக்கும் வகையில் பிரதேசங்கள் தோறும் கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள், கிராமோதைய சபைகள்;, மகளிர் சங்கங்கள் என்பன காணப்படுகின்றது இவர்கள் ஒன்றினைந்து செயற்படுவதனால் அரச பணங்கள் வீண் விரயம் செய்யப்படாமல் பாது காத்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

ஒருதிட்டம் அமுல் படுத்துகையில் அதிதிட்டம் தொடர்பாக பிரதேச மக்கள் அறிவூட்டப்பட வேண்டும் எனவும் கூறியதுடன் இங்கு திட்டமிடல்,பொறுப்புடமை, சமுகப்பராமரிப்பு,சிறுவர் அபிவிருத்தி மற்றும் பெண்கள் அபிவிருத்தி,கல்வி அபிவிருத்தி தொடர்பாகவும் ஆரயப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் உதவி தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான்,உதவி பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப், திட்டமிடல் பணிப்பாளர் கே.எல.ஹம்சார், கல்முனை இரானுவமுகாம் கட்டளை தளபதி டபிள்யூ. பி.பண்டித, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையத்தின் நிர்வாக பிரிவு பொறுப்பதிகாரி அனுரதாச-(ஐ.பி),பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா