இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/20/2013

சிறுமி மீது 57 வயதான முதியவர் பாலியல் துஷ்பிரயோகம்


வீதியால் சென்ற ஒன்பது வயது சிறுமியை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 57 வயதான நபரொருவரை பொலிஸார் தேடிவருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருக்கோவில் விநாயகபுரம் பகுதியிலேயே இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விநாயகபுரம் 4 ஆம் பிரிவு, சென்றல் வீதியைச் சேர்ந்த குறித்த சிறுமி சம்பவதினமான நேற்று தனது வீட்டில் இருந்து அவருடைய பெரியம்மா வீட்டிற்கு மாலை 5 மணியளவில்  சென்றுள்ளார்.

அப்போது அந்தவீதியால் வந்த மாணிக்கப் பிள்ளையார் வீதியைச் சேர்ந்த 57 வயதான நபர் சிறுமியை பாலடைந் வீட்டுக்குள் பலவந்தமாக இழுத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டு சிறுமியிடம் 100 ரூபா பணத்தை வழங்கி இதனை வெளியில் செல்லவேண்டாம் என்று கூறிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந் நிலையில் அழுது கொண்டு வீட்டிற்குச் சென்ற சிறுமி நடந்தவற்றை தாயாரிடம் கூறியுள்ளார். இது தொடர்பில்  தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பணித்ததுடன் தலைமறைவான நபரை தேடிவருவதாக அறிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா