இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/03/2013

இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் மசூதி இடிந்து விழுந்து : 6 சிறுவர்கள் பலி


புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 11 பேர் பலியானதோடு, 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதேவேளை நேற்று ஏற்பட்ட 6.1 புள்ளிகள் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் அசே மாகாணத்தில் உள்ள மசூதி இடிந்து விழுந்தது. இதில், மசூதியின் உள்ளே குர்ஆன் பயின்றுக் கொண்டிருந்த 6 சிறுவர்கள் பலியாகினர். மேலும் 14 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 

நேற்றைய நிலநடுக்கத்தின் விளைவாக அசே பகுதியின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்தன. 

சுமார் 300 வீடுகள் சேதமடைந்து இருப்பதால் அவற்றில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

நேற்றைய நிலநடுக்கம் சுமார் 15 வினாடிகள் நீடித்ததாக தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா