இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/15/2013

விஜய்காந்திற்கு நீதிபதி கண்டனம்


நீதிமன்றத்தில் இப்படியா நடந்து கொள்வது எனவும் இனிமேல் இப்படியெல்லாம் நடக்கக் கூடாது என்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை விஜய்காந்துக்கு அறிவுறுத்தியுள்ளது. 

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் தே.மு.தி.க தலைவருமான விஜய்காந்த் சமீபத்தில், நாகர்கோவில் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக வந்திருந்தார். 

அப்போது அவருடன் பெரும் திரளான தேமுதிகவினரும், கட்சி வக்கீல்களும் வந்தனர். 

அங்கு அரசுத் தரப்பு மற்றும் அதிமுக வக்கீல்களுக்கும், தேமுதிகவினருக்கும் இடையே பெரும் ரகளை ஏற்பட்டது. 

இந்தநிலையில் இவர்கள் நீதிபதி முன்பாகவே அடிதடியில் இறங்கினர். இதையடுத்து கோட்டாறு பொலிஸார், விஜயகாந்த் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். 

இதையடுத்து முன் பிணை கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார் விஜயகாந்த். 

இந்த மனுவை இன்று நீதிபதி மாலா விசாரித்து முன்பிணை வழங்கி உத்தரவிட்டார். அப்போது, நீதிபதி கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரியில்லை. நீதிமன்றத்தில் இதுபோன்று நடந்துகொள்வது கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா