இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/19/2013

டெண்டுல்கரை விட லாராவே சிறந்தவர் : பொண்டிங்

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா தான் சிறந்தவர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியிருப்பதாவது, 

‘‘சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) இருவரும் உலகின் தரமான துடுப்பாட்ட வீரர்கள் தான். ஆனால் டெண்டுல்கரை விட லாரா தான் தனது அணிக்காக நிறைய வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டின் போது, சச்சினை காட்டினாலும் லாரா அடுத்த நாள் துடுப்பெடுத்தாட வருவதை நினைத்து ஒரு தலைவராக பல நாட்கள் தூக்கத்தை தொலைத்துள்ளேன். 

களத்தில் டெண்டுல்கரை கட்டுப்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை எழுந்தால், நிச்சயம் அதற்குரிய வழிமுறையை கண்டுபிடித்து விடலாம். 

ஆனால் லாரா அப்படி இல்லை. களம் இறங்கிய அரை மணிநேரத்தில், அதிரடியாக விளையாடி ஆட்டத்தை நம்மிடம் இருந்து பிரித்து போக்கையே மாற்றி விடுவார். 

என்னை பொறுத்தவரை எத்தனை சதங்கள் அடித்தோம் என்பதை விட அணியின் வெற்றிகள், தொடரை வெல்வது ஆகியவை தான் மிகவும் முக்கியம்’’ என்றார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா