இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/30/2013

கல்முனை நகர அபிவிருத்தி திட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல்


(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை நகரத்தின் அபிவிருத்தி திட்டவரைபு தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் இன்று (30.07.2013) பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நகர அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரனையில் நடைபெற்றது.

இங்கு கல்முனை நகரத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்ட வரைபு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டு கலந்து கொண்டவர்களின் ஆலோசனைகளை பெறும் இறுதி ஆலோசனைக் கூட்டமாக அமைந்திருந்தது. இதன் பின்னர் ஆலோசனைகளை உள்ளடக்கிய இறுதி நகர அபிவிருத்தி திட்ட வரைபு உருவாக்கப்பட்டு அது வர்தமாணியில் பிரசுரிக்கப்பட உள்ளது.
 
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசகரும் யூ.என்.ஹப்பிடாட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளருமான இந்துநில் வீரசூரிய, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டப்லியூ.டீ.செனவிரத்ன, மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட திணைக்களங்களின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா