இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/23/2013

கழகத்தின் புதிய நிர்வாகிகள் பதவிப் பிரமானம் செய்துவைக்கும் நிகழ்வு


(ஹனீபா)
சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306சீ2 மாவட்டத்திலுள்ள கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் 2013/2014 ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவிப் பிரமானம் செய்துவைக்கும் நிகழ்வு நேற்று (21) மாலை நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதியிலுள்ள கூட்டுறவு சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
லயன் எஸ்.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் பிரதம அதிதியாக 306சீ2 மாவட்டத்தின் ஆளுணர் சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி செயலாளர் ஏந்திரி லயன் என்.பி.ரஞ்சன் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக 306சீ2 மாவட்டத்தின் ஆளுணர் சபையின் கிழக்கு மாகாணத்துக்கான பிரதி பொருளாளர் லயன் ஜீ.பாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

ஏனைய அதிதிகளாக 306சீ2 மாவட்டத்தின் ஆளுணர் சபையின் பிராந்திய தலைவர் லயன் எஸ்.தைரியராஜா, வலய தலைவர் லயன் கே.பொன்னம்பலம், ஆளுணர் சபை இணைப்பாளர்களான லயன் எம்.வை.ஏ.சக்கூர், லயன் எஸ்.சன்முகநாதன் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது 2013/2014ம் வருடத்தக்கான புதிய நிர்வாகிகளாக தலைவர் லயன் எஸ்.சிறிரங்கன், செயலாளர் லயன் ஏ.ஜே.எம்.ஹனீபா, பொருளாளராக லயன் பி.ஜே.பத்திரன, அங்கத்துவ பணிப்பாளர் லயன்  எஸ்.தைரியராஜா, 1வது உப தலைவராக லயன் .எஸ்.நந்தகுமார், 2வது உப தலைவர் லயன் ஜே.பி.பத்துலோமியஸ், 3வது உப தலைவராக லயன்.எம்.கோபாலரத்தினம், கணக்காய்வாளர் லயன் எம்.வை.ஏ.சக்கூர் உட்பட பணிப்பாளர் சபை உறுப்பினர்களான லயன் ஏந்திரி யூ.எல்.ஏ.அஸீஸ், லயன் ஈ.நித்தியானந்தம், எஸ்.சன்முகநாதன், லயன்.கே.பொன்னம்பலம், லயன் எஸ்.சசேந்திரன், லயன் ஏந்திரி பி.ராசமோகன், லயன் கே.எஸ்.ஐ.ராமகிறிஷ;னன், லயன் டேமர் கே.யோகராஜா ஆகியோர் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பதவிப் பிரமானம் செய்து வைக்கப்பட்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா