இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/14/2013

திருவள்ளூர் அருகே மேம்பாலம் கட்டும் பணியின் போது மண் சரிந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி


சென்னையில் இருந்து திருவள்ளூர் வழியாக திருப்பதி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. இதற்காக சிறுபாலங்கள் கட்டும் வேலை ஆங்காங்கே நடந்து வருகிறது. இதற்காக வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் சாலை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

திருவள்ளூர் அருகே பட்டரைப்பெரும்புதூர் பகுதியில் குசஸ்தலை ஆற்றின் குறுக்கே நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 6 மாதமாக நடந்து வருகிறது. நேற்றிரவு பட்டரைப்பெரும்புதூர் மேம்பாலத்தில் பில்லர் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக 30 அடியில் பள்ளம் தோண்டப்பட்டது. இந்த மணல் பாலத்தின் பக்கவாட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. 

மேற்கு வங்கம் மகாதேவ் பூர் பகுதியை சேர்ந்த சுபேஷ் மண்டல் (45), கஜோல் தாஸ் (37), சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த புத்தராம் (23) உள்பட 30க்கு மேற்பட்டோர் நேற்றிரவு வேலை செய்து கொண்டிருந்தனர். 30 அடி பள்ளத்தில் இறங்கி பில்லர்களுக்கான இரும்பு தகடுகளை பொருத்தும் பணியில் சுபேஷ், கஜோல், புத்தராம் ஆகியோர் ஈடுபட்டனர். பாலத்தின் பக்கவாட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் திடீரென சரிந்து பள்ளத்தில் விழுந்தது. அத்துடன் இரும்பு பிளேட்டுகளும் சரிந்தது. இதில் சுபேஷ், கஜோல் தாஸ், புத்தராம் ஆகியோர் சரிந்து விழுந்த மண்ணில் சிக்கினர். இதனால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் இரும்பு பிளேட் விழுந்ததில் சுபேஷ் மண்டை உடைந்தது. சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து அங்கிருந்த ஊழியர்கள் திரண்டனர். கஜோல் தாஸ், புத்தராமை மீட்க போராடினர். திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். கயிறு கட்டி பள்ளத்தில் சிக்கியவர்களை மேலே கொண்டு வந்தனர். உயிருக்கு போராடிய கஜோல், புத்தாராம் ஆகியோரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாலுகா இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேம்பாலத்தின் ஒப்பந்ததாரர், பணி மேற்பார்வையாளரிடமும் விசாரிக்கின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா