(ஹனீபா,எம்.ரீ.எம்.பர்ஹான்)
2013ம் ஆண்டின் தயட்டகிருல்ல தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் மலைகளும் மடுக்களாகவும் காணப்பட்ட மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாசல் வீதி 3 மில்லியன் ரூபா செலவிலும், மற்றும் சம்மாந்துறை அறபா வீதி 4 மில்லியன் ரூபா செலவிலும் அபிவிருத்தி செய்யும் அங்குரார்பண நிகழ்வு நேற்று (30) நடைபெற்றது.
பிரதேச சபை உறுப்பினர் மீராமுகைதீன் (றியால்) தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாக கிழக்கு மகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷhட், உப தவிசாளர் எம்.ஐ.கலீலுர் றஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர் .
ஏனைய அதிதிகளாக சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.றனூஸ், சம்மாந்துறைப் பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம், ஹிஜ்றா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.ஏ.அமீர், ஜனாதிபதி இணைப்பதிகாரி எம்.எம்.ஏ.காதர் உட்பட கிரமேதய சபைகளின் தலைவர்கள் , பள்ளிவாசல் தலைவர்கள் ஊர்மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
சம்மாந்துறை அப்றார் பள்ளிவாசல் வீதியின் அபிவிருத்தியானது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும் சம்மாந்துறைப் பிரதேசத்தின் சாதாரண நிலப்பரப்பிலிருந்து செங்குத்தாக 100க்கு மேற்பட்ட அடி உயரத்தில் அமைந்துள்ள அன்வர் இஸ்மாயீல் புரம் என்று அழைக்கப்படுகின்ற சுனாமி அனர்த்திதினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் பல மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் வாழுகின்ற 40 வீட்டுத்திட்டத்திலிருந்து சம்மாந்துறை செந்நெல் கிராமத்தை இணைக்கும் ஒரு முக்கிய பாதையாகும்.
இவ்வீதியின் அபிவிருத்தி தொடர்பாகவும் முக்கியத்துவம் தொடர்பாகவும் தமிழ்மிரர் இணையத்தளம் உட்பட பல இணையத்தளங்களிலும் ஏணைய பத்திரிகைளிலும் பல வருடங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்த கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவற்றுக்கெல்லாம் வெகுமதியாக இந்த வீதி நவீன முறையில் அபிவிருத்தி செய்யப்படுவதையிட்ட மிகவும் மகிழ்சியடைவதாகவும் இந்த விதியின் அபிவிருத்திக்கு உழைத்த அனைவருக்கும் நன்றியினையும் பாராட்டையும் அப்பிரதேச மக்களும் பொதுநல அமைப்புக்களும் வெளியிட்டுள்ளனர்.









0 comments:
Post a Comment