இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/07/2013

நீர்பாசன காரியாலய திறப்பு விழா Photos


(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் நீர்பாசன திணைக்களத்தின் தரமுயர்த்தப்பட்ட புளக் ஜே யுனிட் காரியாலய திறப்பு விழா நேற்று (05) மாலை நீர்பாசன திணைக்கத்தின் சம்மாந்துறை யுனிட்காரியாலய திட்ட முகாமையாளர் ஈ.சிவநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பிரதம அதிதியாக நீர்பாசண திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஏந்திரி வை.அப்துல் மஜீட் கலந்து கொண்டார்.

அவர் இங்கு உரையாற்றுகையில் இலங்கையின் நெல் உற்பத்தியில் பெரும் பங்களிப்பை செய்து வருகின்ற அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் இப்பிராந்தியத்துக்கான தரமுயர்த்தப்பட்ட யுனிட் காரியாலயம திறந்து வைக்கப்படுவது இப்பிராந்திய விவசாயிகளுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.

இந்தக் காரியாலயத்தினூடாக வெறும் நீர்பாசன பணிகளை மாத்திரம் மேற்கொள்ளது பொதுவாக விவசாயிகள் எதிர் நோக்குகின்ற பலதரப்பட்ட  பிரச்சினைகளுக்கும் அதாவது நீர்பாசனப் பிரச்சினை, விவசாயிகளின் விளைபெருட்கள் தொடர்பான பிரச்சினை, உரம் வழங்கல் தொடர்பான பிரச்சினைகள் விதைநெல் உட்பட சகல விடயங்களுக்கும் தீர்வு பெற்றுக் கொடுக்கும் ஒரு இடமாக இந்தக் காரியாலயம் செயற்படவுள்ளது விவசாயிகள் கடந்த காலங்களில் பெற்ற கஷ;டங்களுக்கு விமோசனம் பெற்றுக்; கெர்டுக்கும் வகையில் இந்தக் காரியாலயம் செயற்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் கல்லோயா அபிவிருத்தி பிரதேசத்தில் 5வது தரமுயர்த்தப்பட்ட காரியாலயமாக இக் காரியாலயம் திறந்து வைக்கப்படகினறது. விவசாயத்திணைக்களம் 113 வருடம் பழைமை வாய்ந்த ஒரு திணைக்களமாகும் அதன் சேவைகளை எதிர்காலத்தில் விணைத்திறன்மிக்க ஒரு சேவையாக மாற்றி விவசாயமக்களை சமூக பொருளாதார ரீதியில் வலுவுள்ள மக்களாக மாற்றி அமைக்கும் நோக்குடன் நாட்டின் பல பிரதேசங்களிலும் இதனை செயற்படுத்ததிட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றோம் அத்துடன் இந்தப் பிரதேசத்திலுள்ள விவசாயிகளின் தேவைக்காக இங்கு ஒரு பயளைக் களஞ்சியத்தை அமைத்துத் தரவுள்ளதாகவம் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் நீர்பாசனப் பணிப்பாளர் எந்திரி குமாரதேவன், தலைமைக்காரியாலய பிரதம நீர்பாசன எந்திரி அபே சிறிவர்தன, அம்பாறைப் பிராந்திய நிர்பாசன பணிப்பாளர் சமன் வீரசிங்க, சம்மாந்துறைப் பிரதேச நீர்பாசன எந்திரி எம்.எஸ்.றிப்னாஸ் உட்பட உயரதிகாரிகள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்,
இவ்வைபவத்தின் போது அதிதிகளினால் மரக்கன்றுகளும் நடப்பட்டன.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா