இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/26/2013

இறந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவர் 13 நாட்களின் பின்னர் உயிருடன் வந்தர்


இறந்த நிலையில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவர் 13 நாட்களின் பின்னர் உயிருடன் வந்தச் சம்பவமொன்று பிலடெல்பியாவில் இடம்பெற்றுள்ளது.


இப்பெண் உயிருடன் வந்தததைக் கண்டு அவரது குடும்பத்தார் மட்டுமன்றி பலர் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.



செரோலின் ஜெக்கோன் என்ற பெண்ணே இவ்வாறு 13 நாட்களின் பின்னர் உயிருடன் திரும்பியுள்ளார்.



இவர், கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி காணாமல் போனாதாக அவரது குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.



இந்நிலையில் முறைப்பாடு செய்து இரண்டு நாட்களின் பின்னர், பெண் ஒருவரின் சடலம் தெருவிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்  அச்சடலம் காணாமல் போன அந்த பெண்ணின் சடலமா என்பதை உறுதி செய்யுமாறும் பொலிஸார்  மேற்படி குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.



இந்நிலையில் குறித்த சடலத்தை பார்வையிட்ட மேற்படி பெண்ணின் மகன் அது காணாமல் போன தனது தாயின் சடலம் என உறுதி செய்துள்ளார்.



இதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் இறுதி கிரியைகளை நடத்துவதற்கு குடுபம்பத்தினர் தீர்மானித்தனர்.



இதற்கமைவாக அப்பெண்ணின் பூதவுடலை நல்லடக்கம் செய்துவிட்டு அப்பெண்ணின் கடந்த கால நினைவுகளுடன் மட்டும் பெற்றோர் வீடு திரும்பினர்.



சோகத்தில் ஆழந்திருந்த குடும்பத்தினருக்கு எதிர்பாராத விதமாக இன்ப அதர்ச்சி ஒன்று கிடைத்துள்ளது.



 நல்லடக்கம் செய்யப்பட்ட தனது மகள் உயிருடன் இருப்பதாகவும் அவர் உலநல சிகிச்சையை பெற்றுகொண்டு இருப்பதாகவும் அதிகாரிகள் அக் குடும்பத்தினருக்கு அறிவித்துள்ளனர்.



இதனைக் கேட்டு அதர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் குறித்த பெண் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டனர்.



'எங்கள் மகள் உயிருடன் இருப்பதை கேட்டு நாங்கள் மகிழச்சியடைந்தோம். ஆனால், எங்கள் மகள் என கருதி முகம்தெரியாத ஒருவரின் சடலத்தை அடக்கம் செய்தது மிகவும் வேதனை அளிக்கின்றது' என ஜெக்சனின் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளானர். 



'அடக்கம் செய்யப்பட்ட அப் பெண் யாரென இதுவரை பொலிஸார் கண்டறியவில்லை. எனவே புதைக்கப்பட்ட அச்சடலத்தை மீண்டும் தோன்றி எடுக்க வேண்டும் என நான் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்'  என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா