வைத்தியசாலையில் சிகிச்சையின் போது தவறுதலாகக் கை துண்டிக்கப்பட்ட சட்டக் கல்லூரி மாணவி அச்சலா பிரியதர்ஷினி தற்போது செயற்கைக் கையுடன் ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியுள்ளார்.
செயற்கை அவயங்களைப் பொருத்துவதில் உலகப் பிரசித்தி பெற்ற ஜேர்மன் நாட்டின்’OTTOBOCK’ எனும் நிறுவனமே இம்மாணவிக்கு இச் செயற்கைக் கையைப் பொருத்தியுள்ளது.
இதற்குத் தேவையான சுமார் 42 இலட்சம் ரூபா நிதி உதவியை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
மாணவி அச்சலா பிரியதர்ஷினிக்கும் அவருடன் ஜேர்மனிக்குச் சென்ற அவரது தாயாருக்கும் அங்கு செல்வதற்கான இரு வழி விமான டிக்கட்டுக்களை இலங்கை வெளியுறவு அமைச்சு வழங்கியதுடன் இருவரும் ஜேர்மனியில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதற்குத் தேவையான முழுச் செலவையும் வெளியுறவு அமைச்சு ஏற்றுக்கொண்டது.
எலும்பு முறிவு காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாத்தறையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியான அச்சலா பிரியதர்ஷினியின் இடது கையின் கீழ்பகுதி சத்திர சிகிச்சையினூடாக தவறுதலாக அகற்றப்பட்டது தெரிந்ததே
0 comments:
Post a Comment