மாணவர்களின் ஆளுமையினையும்,திறமையினையும்,தலைமைத்துவப் பண்புகளையும வெளிக் கொணரும் நோக்குடன் கல்வியமைச்சினால் மாணவர் பாராளுமன்றம் அமைக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயத்தில் இன்று (22) மாணவர் பாராளுமன்ற தேர்தல் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.
இப்பாடசாலையில் 95 மாணவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் 130 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் பாடசாலைமாணவர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு தமது வாக்குகளை வழங்கமுடியும் இத்தேர்தலில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் மாவர்களுக்கு 10 அமைச்சுப் பதவிகளும், 10 பிரதியமைச்சுப் பதவிகளும், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் தலைவர், எதிhகட்சித்தலைவர் பதவிகளும் வழங்கப்பட்வுள்ளன.
இந்த தேர்தல் கடமையில் பாடசாலையின் பிரதி அதிபர் எம்.எச். அப்தல் ஹை, வலயத்தலைவர் i.எல்.எம்.நஸீர் உட்பட பல ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.






0 comments:
Post a Comment