இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/23/2014

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும்

(ஹனீபா)
வறுமை என்பது கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஒரு சவாலாக தடையாக அமைந்து விடக் கூடாது என்பதற்காக எந்தவொரு நாட்டிலும் இல்லாதவாறு எமது நாட்டில் எமது அரசினால் கூடுதலான பணங்கள் கல்விக்காக செலவு செய்யப்படுகின்றன ஒவ்வொரு ஆண்டிலும் வரவு செலவுத்திட்டத்தில் கல்விக்காக கூடுதலான பணம் ஒதுக்கப்பட்டு வருகின்றன இதனை நாம் ஒருவரப்பிரசாதமாக பயன்படுத்தி சிறந்த கல்வியினை பெற்றுக் கொள்ள வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

சம்மாந்துறை கஸ்ஸாலி முஸ்லிம் வித்தியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (22) பாடசாலை அதிபர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்ததார்.

அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் எமது நாட்டில் கல்வியினை கற்பதற்கு எந்த தடைகளும் கிடையாது கல்வியினை கற்பதற்குரிய பாடசாலைகள் உள்ளது அங்க இலவச சீருடைகள், பாடப்புத்தகங்கள், மதிய போசனம், போசாக்குக்கான பால் வழங்கள், புலமைப்பரிசில் என்பன வழங்கப்பட்டு வருகின்றன அதே போன்று கல்விக்கான சிலதேவைகளை அப்பிரதேசங்களிலுள்ள அரசியல் தலைமைகள், தனவந்தர்கள் என்பவர்கள் மூலமும் வழங்கப்படுகின்றன இவ்வாறு இருக்க நாம் எதற்காக கல்வியினை இடைநடுவில் கைவிடவேண்டும் எனவும் கூறினார்.

எமது பிரதேசத்தின் ஜீவனோபாய தொழிலாக விவசாயம், வர்த்தகத்துறை, மீன்பிடிகாணப்பட்டது அதனுடாக நாம் பெற்றுக் கொள்ளும் வருமானத்தை விட கல்வியின் மூலம் இன்று கூடுதலான வருமாணங்களை தொழில் நுட்பத்துறையில் பிரகாசிக்கும் சகலரும் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர் எனவும்  பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்ததார்.

இந்நிகழ்வில் அதிதிகளாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.றனூஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி யூ.எல்.பஸீர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா