இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/29/2014

ஏசியா பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனைமாநகர சுகாதாரதுறை சார்ந்தோருக்கான செயலமர்வு

-எம்.வை.அமீர், எம்.ஐ.சம்சுடீன்-
 
ஏசியா பவுண்டேசனின் ஏற்பாட்டில் கல்முனைமாநகர சுகாதாரதுறை சார்ந்தோருக்கான செயலமர்வு கல்முனை மாநகரசபையின் பிரதம வைத்தியர் எம்.சீ.மாஹீர் தலைமையில் சாய்ந்தமருது சீ ப்பிரீஸ் ஹோடேல் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இங்கு கல்முனை மாநகரசபை எதிர்நோக்கும் சுகாதார ரீதியிலான பிரட்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. தின்மக்கழிவு முகாமைத்துவம் மடுவம் தொடர்பான கருத்தாடல்கள், சில துறைகளை தனியார் மயப்படுத்துவது தொடர்பான கருத்துப்பரிமாறல்கள், கல்முனை மாநகரசபையில் பணிபுரியும் சுகாதாரத்துறை சார்ந்த ஊழியர்களை வலுவுட்டுதல் சம்மந்தமான கருத்துக்களும் பரிமாறப்பட்டன.

ஏசியா பவுண்டேசனின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத் அவர்களது வளிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை மாநகரசபை ஆணையாளர் ஜே.லியாக்கத், கணக்காளர் எல்.ரீ.சாலிதீன் மற்றும் எம்.ஏ.சீ.நஜீப் (டீ.டீஃஈ.பீ. சீ.ஈ.ஏ.அம்பாறை), எம்.ஐ.எம்.ஜெசூர் (திட்ட பணிப்பாளர் சீ.சீ.டீ) எம்.ஐ.அப்துல் மஜீத்,சுகாதார வைத்தியர் கே.எல்.எம்.ரயீஸ்,எம்.எம்.முர்ஷிதா (யூ.டீ.ஏ.) எம்.சீ.முனீர் (யூ.டீ.ஏ.) போன்றோருடன் கல்முனை மாநகரசபை முதல்வர் நிஸாம் காரியப்பரது பிரத்தியோக செயலாளர் ரீ.எல்.எம்.பாருக்கும் கலந்து கொண்டதுடன் கல்முனை மாநகரசபையின் சுகாதார துறைசார்ந்த உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா