இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/16/2014

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய இல்ல விளையாட்டு போட்டி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை வலயத்திற்குட்பட்ட கமு/சது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய (Super National School) இல்ல விளையாட்டு போட்டி  2014.03.15 ஆம் திகதியன்று அதிபர் எச்.எம்.பாறூக் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

இவ் இல்ல விளையாட்டு போட்டியில் சிவப்பு, நீலம், பச்சை,மஞ்சள் ஆகிய அணிகள் கலந்துகொண்டன. இறுதியில் பச்சை அணி முதலிடத்தையும் நீலம், மஞ்சள், சிவப்பு  ஆகிய அணிகள் முறையே இரண்டாம் மூன்றாம் நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இவ்விழாவிற்கு அதிதிகளாக சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம். .எஸ்.எஸ்.நஜீம், சம்மாந்துறை வலய கோட்டக்கல்வி அதிகாரி ஐ.ஏ.றஸுல், சம்மாந்துறை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஜே.கே.தகனக்க, உதவிக்கல்விப்பணிப்பாளர் (உடற்கல்வி) ஏ.முஸ்ற்றாக் அலி, பிரதி அதிபர்கள், பகுதிப் பொறுப்பாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.











0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா