இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/29/2014

சிராஸ் மீராசாஹிப் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து கொள்ளும் நிகழ்வு

(ஹனீபா)
சாய்ந்தமருது பிரதேசத்தை தனியாக நிர்வாகிக்கக் கூடிய தனியான உள்ளுராட்சி சபையினை எந்தவொரு ஊருக்கும்  எந்தவொரு சமூகத்துக்கம் பாதிப்பில்லாத வகையில் சாய்ந்தமருது மக்களுக்கு விரைவில் பெற்றுத் தரப்படும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபையின் முன்னாள் மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து கொள்ளும் நிகழ்வு (24.03.2014) மாலை சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் தலைவர் ஏ.சலீம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் அதாஉல்லா இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில சாய்ந்தமருது கிராமம் அம்பாறை மாவட்டத்தில் மூத்த கிராமமாகும் இந்தக் கிராமத்துக்கு தனியான உள்ளுராட்சி மன்றத்தின் தேவை அதன் தாகம் தொடர்பாக இங்கு முன்வைக்கப்ப்டட கருத்துக்களை நாள் ஆழமாக அவதானித்த போது எமது மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேசமும் அவ்வப் பிரதேசத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தி அதற்கான தடயங்களை பதிக்க நினைப்பது காலத்தின் தேவையாகும் .

ஆரம்ப காலகட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் நிந்தவூர்பற்று, சம்மாந்துறைப்பற்று, வேவகம்பற்று, அக்கரைப்பற்று என்ற சபைகளாக  காணப்பட்டது காலப் போக்கில்  காலத்தின் தேவைகருதி அக்கரைப்பற்று பிரதேச சபை பிரிக்கப்பட்டு தங்களை தாங்களே ஆளுகின்ற சக்தியாக மாற்றம் பெற்று அட்டாளைச் சேனை பிரதேசசபை அது போன்று ஆலையடி வேம்பு, திருக்கோவில் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டது அதே பொன்று சம்மாந்துறைப் பிரதேசம் நாவிதன்வெளி பிரதேச சபையாகவும், இறக்காமம் பிரதேச சபையாகவும் பிரிக்கப்பட்டு செயற்பட்டு வருகின்றன இதுபோன்று கல்முனை மாநகர சபையிலிருந்து சாய்ந்தமருது தனிப் பிரதேச சபையாக மாற்றம் பெறுவது காலத்தின் கட்டாய தேவையாகும்.

அதே போன்றுதான் எமது மாவட்டத்தின் மூத்த பிரதேச மான சாய்ந்தமருது பிரதேசம் நியாயமான காரணங்;களினால் தனிப்பிரதேச சபையாக ஆரம்பிப்பது இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும்.

கல்முனை மாநகர சபையின் முன்னாள் மாநகர முதல்வர் தற்போது எம்முடன் இணைந்து கொள்கின்ற சகோதரர் சிரஸ் மீராசாஹிப் அவர்கள் கல்முனை மாநகர சபையின் நிர்வாக செயற்பாடுகளின் போது கல்முனை பிரதேச மக்களால் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை கவலையுடன் விபரித்தார் இதற்கு கல்முனை பிரதேச மக்களை குறை கூறமுடியாது.

அந்த மக்களை வழிநடாத்துகின்ற அரசியல் தலைமைகள் தமது இருப்புக்களை தக்கவைத்துக் கொள்வதற்காக  செய்கின்ற சதியேயாகும் இந்தக் கைங்கரியத்தை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்தவம் அம்பாறை மாவட்டத்தில் தொடர்சியாக செய்து வந்துள்ளது இன்னும் செய்து கொண்டுடிருக்கின்றது.

முஸ்லீம் காங்கிரசின் மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷரப் அவர்கள் எம்மை சரியான வழிகாட்டலோடு மூதுர் தொடக்கம் பொத்தவில் வரைக்குமான மக்களின் குணாம்சங்களை அறிந்த அவர்களின் எதிர்பார்புக்கு மதிப்பளித்து சிறந்த தலைமைப் பன்புகளை எமக்கு வழங்கியிருந்தார் அதுமாத்திரமன்றி அதிகாரப்பகிர்வுகளை எவ்வாறு பகிர்ந்தளிப்பது என சரியான விதத்தில் எமக்கு கற்றுத்தந்து  விட்டுச் சென்றுள்ளார்.

இன்றைய தலைமைத்துவம் தன்னுடைய அபிலாசைகளை நிறைவ செய்து கொள்ள மக்களை ஏவிவிட்டு தன்னுடைய காய்களை நகர்த்திவருவதில் வல்லவராக வருகின்றார் காலத்துக்கு காலம் சில கதைகளை எமது மாவட்டத்துக்கு கொண்டு வந்து மக்களை வழிகெடுத்த வந்துள்ளார்.

கடந்த மாகாண சபைத் தேர்தல் காலத்தில் இங்கு வந்து பள்ளியா, மஹிந்தவா என்று கண்ணீர் விட்டார் மக்கள் எல்லோரும் பள்ளி என்றார்கள் தேர்தல் நிறைவடைந்த பின்னர் இல்லை இல்லை மஹிந்ததான் என்றார் இவ்வாறு காலத்துக்கு காலம் கதை சொல்லிக்கொண்டு எம்து மக்களை சூடாக்கி விட்டு ஈற்றில் மக்களை நட்டாற்றில் விடுவதை தவிர அவரால் எதுவும் செய்யமுடியாது எனவும் அமைச்சர் அதாஉல்லா தெரிவித்ததார்.

தலைமைத்தவங்கள் என்றால் அதற்கு ஒரு வரைவிலக்கனம் இருக்க வேண்டும் பக்குவமும்;, நிதானமும் இருக்க வேண்டும் முதல்வர் சிறாஸ் அவர்கள் பாலைவனத்தில் தூக்கிவீசப்பட்டதாக கூறினார்கள் தலைமைத்துவத்துக்கு இல்லாது சகல பன்புகளும் சிறிலங்க முஸ்லீம் காங்கிரஸ் தலைமைக்கு உண்டு 2004ம் ஆண்டு ரணில் விக்ரம சிங்காவுடைய ஆட்சிக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த போது எமது மாகாணத்தை சேர்ந்த மக்கள் பல துயரங்களில் சிக்கித் தவித்தனர் அப்போது நாங்கள் தமது இருப்பை பரிசீலிப்போம் எனக் கேட்ட போதெல்லாம் அவர் நேர்வேநாட்டினதம்,; ரணிலுடைய கைப்பொம்மையாக இருந்து கொண்ட பொறுத்திருங்கள் நடப்பதை கண்டு கொள்ளாதீர்கள் என்ற தலைமைத்துவத்தின் செயற்பாடுகளை தூக்கி வீசி விட்டு 2004ம் ஆண்டு தேசிய காங்கிரசை ஆரம்பித்து  கடந்த பத்து ஆண்டு காலமாக எந்தவொரு பிரதேசமக்களையும் குறை காணமல் எமது பணிகளை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.

இறைவனில் உதவியால் நாங்கள் எடுத்துக் கொண்ட எந்த முயற்சிகளும்; ஒரு போதும் வீண் போகவில்லை அதனை எமது மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர்.

சகோதரர் சிராஸ் அவர்கள் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்தவத்தின் திருகு தாளங்களை 10 அண்டு களுக்கு பின்னராவது அறிந்து கொண்டு எம்மோடு இணைந்த கொள்வது பாராட்டுக்குரியதாகும் சரியான அரசியல் தலைமைத்தவத்தை இந்த மக்கள் தெரிவு செய்து கொள்ளும் போது தங்களுடைய சகல தேவைகளும் நிறைவு செய்யப்பட்டதற்கு சமமாகும் எனவும் தெரிவித்ததார்.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணவிதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள்,உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், ஊர் பிரமுகர்கள்.உலமாக்கள் உட்பட பெருந் தொகையான  மக்கள் கலந்த கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது சாய்ந்தமருது மக்களால் அமைச்சர் அதாஉல்லாவிடம் சாய்ந்தமருது பிரதேசத்துக்கான தனியான உள்ளுராட்சி சபையின் தேவை தொடர்பான கோரிக்கை அடங்கிய மஹஜரினை ஊர்பிரமுகர்கள் சார்பாக முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் வழங்கி வைத்தமை குறிப்பிடத் தக்கதாகும்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா