இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/20/2014

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் திரிய பியச திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு

-எம்.வை.அமீர்-

சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் மூலம் திரிய பியச திட்டத்தின் கீழ் வீடு கையளிப்பு கையளிக்கப்பட்டது.

சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட கொடி விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற நிதியைக்கொண்டு சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் ஒவ்வொரும் 160000.00 ரூபாய் பொறுமதியான 12 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தின் மூலம் திரிய பியச திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றை இன்று சம்மாந்துறை விளினயடி 01.02.03 பிரதேசத்தை உள்ளடக்கி நடைபெற்ற கிராமிய மக்கள் ஒன்றுகூடல் மற்றும் நடமாடும் சேவை நிகழ்வைத் தொடர்ந்துஇ சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌசாட் அவர்களினால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹுசைன் உட்பட சம்மாந்துறை பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா