இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/20/2014

முஸ்லிம் லிபரல் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணக்க அரசியலில் ஈடுபடும் முஸ்லிம் லிபரல் கட்சித்தலைவர்- எம்.இஸ்மாயில்

-எம்.வை.அமீர்-
சமூகத்துக்காக சேவை செய்ய எந்த கட்சியோ அல்லது தனிநபரோ முன்வருவார்களானால் அவர்களை அரவணைத்து அவர்களுடன் இணைந்து சேவை செய்வதற்காகவே முஸ்லிம் லிபரல் கட்சி உதயம்மகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் சிரேஷ்ட கணக்காளர் எம்.இஸ்மாயில் தெரிவித்தார்.

முஸ்லிம் லிபரல் கட்சி சார்பாக அக்கட்சியின் கொள்கைகள் செயற்பாடுகள் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று முஸ்லிம் லிபரல் கட்சியின் சாய்ந்தமருதில் அமைந்துள்ள அதன் செயலகத்தில் இன்று (2014-04-19) ம் திகதி இடம்பெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் சிரேஷ்ட கணக்காளர் எம்.இஸ்மாயில், லிபரல் என்பது ஒருவரது உரிமையில் மற்றவர் தலையிடது சுதந்திரமாக வாழ்வது என்பதாகும், இந்த அடிப்படையில் தேவைகள் அதிகரித்துள்ள இந்தகாலகட்டத்தில் மக்கள் நலத்திட்டங்களுக்காக அம்மக்களின் கல்வி, சுகாதாரம், விவசாயம் கடற்றொழில் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற திட்டங்களுக்காகவும் முஸ்லிம்களின் இருப்பு அவர்களது நிலபுலன்களை அவர்களே நிர்வாகிக்கும் நிலையை உருவாக்குதல் போன்ற தேவைகளுக்காகவும் முஸ்லிம் லிபரல் கட்சி செயற்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் தலைவர் எம்.இஸ்மாயில் ஏனைய கட்சிகளை தங்கள் ஒருபோதும் விமர்சிக்கப்போவதில்லை என்றும், அக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கு பிரயோசனப்படக்கூடிய விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயட்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கட்சிகளின் அதிகரிப்பால் மக்கள் மத்தியில் ஜனநாயக ரீதியான செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக கூறிய தலைவர் முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு ஒன்றை பெற்றுக்கொள்ள தனது கட்சி பாடுபடும் என்றும் தெரிவித்தார். முஸ்லிம்களின் தேவைகளை நிறைவேற்றுவது தொடர்பில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுடனும் எதிக்கட்சிகளுடனும் பேசி அவர்களது இணக்கப்பாட்டுடன் இம்மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருவதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறே செயட்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்மையில் முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மை தொடர்பாக கருத்து வெளியிட்ட முஸ்லிம் லிபரல் கட்சித்தலைவர்- எம்.இஸ்மாயில் குறித்த பிரச்சினையுடன் தொடர்புபட்ட அமைப்புக்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அவர்கள் எதிர்க்கும் விடயங்களை குறித்து  தெளிவாக அறிவார்கள் என்றால் இஸ்லாம் மார்க்கத்தின் மேன்மையை அறிவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அக்கட்சியின் செயலாளர் எல்.றியாஸ் உட்பட அக்கட்சியின் ஆதரவாளர்களும் வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா