-எம்.வை.அமீர்-
முகம்மது நபி ஸல்லால்லாஹு அலைஹிவசல்லாம்
அவர்களின்
கற்றுக்கொள்ளலலும் பற்றுக்கொள்ளலலும் எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவும், முகம்மது
நபி ஸல்லால்லாஹு அலைஹிவசல்லாம் அவர்களின் ஸீரா தொடர்பான நூல்கள்
அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு, மேர்சி லங்கா
நிறுவனத்தின் அனுசரணையுடனும் குவைத் லஜன்னத்துஸ் சனாபில் அல் கைரியா நிறுவனத்தின்
நிதி ஒதுக்கீட்டுடனும் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபையும்
ஜமாத்துஸ் சலாமா அமைப்பும் இணைந்து சாய்ந்தமருது
மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி என்.எம்.அப்துல் முஜீப்
(நளீமி) தலைமையில் சாய்ந்தமருது பாரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் (2014-05-21)மாலை இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு மேர்சி லங்கா
நிறுவனத்தின் பணிப்பாளர் ஒஸ்தாத் நஸ்ர் ஹஸன் கலீல் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து
கொண்டிருந்த அதேவேளை மேர்சி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் அஷ்சேக்
எம்.ஆர்.எம். முனாஸ் (நளீமி) அவர்கள் கற்றுக்கொள்ளலலும் பற்றுக்கொள்ளலலும் எனும்
தலைப்பில் விசேட சொற்பொழிவு ஒன்றினை வழங்கினார். இந்நிகழ்வில் மேர்சி லங்கா
நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் அஷ்சேக் ஹஸன் சியாத் (நளீமி)
அவர்களும் இப்பிராந்தியத்தின் உயர் மார்க்க அறிஞ்சர்களும் பெரும் திரளான மக்களும் கலந்து
கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் இங்கு வந்திருந்த அனைவருக்கும் முகம்மது நபி
ஸல்லால்லாஹு அலைஹிவசல்லாம் அவர்களின் ஸீரா தொடர்பான நூல்கள்
அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது குறிப்படித்தக்கது.
0 comments:
Post a Comment