இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/28/2014

மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவம்

-அபூ இன்ஷாப்

சம்மாந்துறையின்  சேர்ந்த அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயிலின் 8வது வருட ஞாபகாத்த கத்தமுல் குர்ஆன் தமாம் வைபவமும் விNஷட துஆப் பிராத்தனையும் நாளை (29) அஸர் தொழுகையினைத் தொடர்ந்து சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

அன்வர் இஸ்மாயில் நற்பணி மன்றத்தின் எற்பாட்டில் அவ்வமைப்பின் தலைவர் வை.பி.சலீம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த வைபவத்தில் சிறப்பு பயான் நிகழ்வை மௌலவி எம்.வை.எம்.மஹ்றூப் மதனி நிகழ்த்தவுள்ளதுடன், அமைச்சர் மர்ஹூம் எம்.ஐ.அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த நினைவுப் பேருரையினை இலங்கை தென் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் சிரேஷ;ட தமிழ்துறை விரிவுரையாளர் கலாநிதி றமீஸ் அப்துல்லா ஆற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் அன்வர் இஸ்மாயிலின் குடும்ப உறப்பினர்கள், கல்விமான்கள், விரிவுரையாளர்கள் அன்வர் இஸ்மாயிலின் அதரவாளர்கள் என பெருந் தொகையினர் கலந்த கொள்ளவுள்ளனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா