இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/17/2014

அமைச்சுப் பதவியைத் துறக்கிறார் ஹக்கீம்

my.Ameer
அரசாங்கம் முஸ்லிம்களுக்காக பாதுகாப்பினை உடனடியாக வழங்க தயாராக வேண்டும். அரசு இதனை வழங்க தவறும்பட்சத்தில் அமைச்சுப்பதவியை துறக்க என்றும் தயார். இதற்கான அங்கீகாரத்தையும் உரிமையையும் கட்சியின் உயர்மட்டம் எனக்கு வழங்கியுள்ளது என நேற்று அழுத்கமை, தர்கா நகர் மற்றும் பேருவளையில் முஸ்லிம்களின் மீது இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் இன்று கட்சியின் தலைமையகமமான தாருஸ்ஸலாமில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீ.ல.மு.கா தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய சம்பவங்கள் தொடர்பில் நேரில் சென்று பார்த்த போது அங்குள்ள மக்கள் மத்தியில் முகங்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் அவர்களின் சொத்துக்களுக்கும் ஏற்பட்டுள்ள அழிவுகளை பார்க்கின்றபோது இனவாத வெறியர்கள் இதனை திட்டமிட்டு செய்திருக்கின்றார்கள் என்பது புலப்படுகின்றது.

மக்களளும் கட்சியின் முக்கியஸ்தர்களும் முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து உடனடியாக வெளியிறங்க வேண்டும் என அழுத்தமாக தமது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் பக்குவமாக நிதானமாக சிந்திக்கும் கட்சி என்ற ரீதியில் உடனடியாக மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டு வருகின்றது.

அரசு உடனடியாக சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டுவதோடு நேற்று இடம்பெற்ற கூட்டத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பில் அரசும் பொலிசாரும் பதில் கூறவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அரசு உடனடியாக உத்தரவாதம் வழங்க வேண்டும். அதைவிடுத்து பேச்சுவார்த்தை என்ற ரீதியில் சமாளிப்புக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

அரசாங்கம் குறித்து பாரிய அதிர்ப்தியான கருத்துக்களை மக்களும் கட்சியின் உயர்மட்டங்களும் தெரிவிக்கின்றது. அமைச்சுப் பதவியில் இருந்து கொள்வது தொடர்பான முடிவினை எடுக்கும் பொறுப்பினை என்னிடம் வழங்கியுள்ளார்கள்.

அரசாங்கம் முஸ்லிம்களுக்காக பாதுகாப்பினை உடனடியாக வழங்க தயாராக வேண்டும். அரசு இதனை வழங்க தவறும் பட்சத்தில் அமைச்சுப்பதவியை துறக்க என்றும் தயார் இதற்கு முன்னரும் இருமுறை இதனைச் செய்துள்ளேன்.

சந்தர்ப்பவாத அரசியல் செய்ய நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு கபட நோக்கத்தில் செயற்படுகிறது  என்ற குற்றச்சாட்டையும்இ தருணம் பார்த்து அரசின் காலைவாருகின்றது என்றும் ஒரு குழுவினர் தெரிவித்துக்கொண்டு வருகின்றார்கள்.

நெருக்கடியான இவ்வாறான கட்டத்தில் பாதுகாப்பு சகவாழ்வு உறுதிப்படுத்தப்படல் வேண்டும். இனவாத குழுக்களுக்கும் இனவாத சக்திகளுக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மக்கள் கேட்கின்றார்கள் இவ்வரசில் இருந்து என்ன நன்மை என? அழுத்தமான அரசியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என இன்றைய உயர்மட்டக்குழு தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்களுக்கான பாதுகாப்பை அரசு வழங்க தவறும் பட்சத்தில் அமைச்சுப் பதவியை துறப்பேன். இது தொடர்பான எங்களது நடவடிக்கைகளை நாளை அல்லது நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் காட்டவுள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.


இவ்ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் செயலாளர் நாயகம்இ தவிசாளர்இ பாராளுமன்ற உறுப்பினர்கள்இ மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாநகர முதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா