இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

6/02/2014

சம்மாந்துறையில் முப்பெரு நிகழ்வுகள்

-எம்.வை.அமீர்-
இன்று (31-05-2014) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டின் கீழ் சம்மாந்துறையில் ஏற்கனவே இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலையை  ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தி அதனை சம்மாந்துறை செந்நெல் கிராமம் 01 ல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தை சம்பிரதாய பூர்வமாக அங்குராப்பணம் செய்துவைக்கும் நிகழ்வும்,

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் விசேட குழந்தை பராமரிப்பு பிரிவு, வைத்திய அதிகாரிகளுக்கான விடுதி திறந்து வைத்தல், புதிய X-Rey இயந்திரம் கையளித்தை மற்றும் சுகவாழ்வு நிலையம் திறந்து வைத்தல் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கிழக்குமாகாண சுகாதார, சுதேச வைத்திய, மகளிர் விவகார, சிறுவர் பராமரிப்பு மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் அழைப்பின் பெயரில்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

கௌரவ அதிதிகளாக மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர் மற்றும் ஏ.எல்.எம்.தவம் போன்றோருடன் மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன் மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் Dr.திருமதி எஸ்.சிறீதர் உட்பட சுகாதார சேவையைச் சார்ந்த பெரும் திரளானோர் பங்கு கொண்டிருந்தனர்.

இன்றைய நிகழ்வின் மாலை நிகழ்வுகளாக ஐன்பது வறிய குடும்பங்களுக்கு இலவசமாக மின்சார இணைப்புக்களை வழங்கும் நிகழ்வும் இரவு பிரதான வீதியில் எம்.வை.எம்.மன்சூர் அரங்கில் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளது.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா