-எம்.வை.அமீர்-
கடந்த 2004ம்
ஆண்டு ஏற்பட்ட கொடூர சுனாமி பேரலைகளால் இலங்கையில் பாதிக்கப்பட்ட கிராமங்களில்
சாய்ந்தமருதுக் கிராமம் அதி உச்ச அளவில் பாதிக்கப்பட்டிருந்தது.
சுனாமி பேரலைகள் சாய்ந்தமருதை தாக்குவதற்கு
முன்பு பிரதான வீதியில் இருந்து கடற்கரை வரை ஒரு கிலோமீட்டராக இருந்த மக்கள்
வாழும் பிரதேசம் இப்போது கிட்டத்தட்ட 750மீட்டராக
மாறியுள்ளது. சனநெரிசல் மிக்க சாய்ந்தமருது மக்களில் அதுவும் கரையோரத்தை அண்டி
வாழ்ந்த மக்களின் வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலை
செய்பவர்களாகவும் வியாபாரம் மற்றும் விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்களாகவும்
இருப்பதாலும் அவர்கள் குறித்த பிரதேசத்திலேயே வாழவேண்டிய நிர்ப்பந்தத்தில்
இருக்கின்றனர். நேரடியாக பாதிக்கப்பட்டவர்களாகையால் கரையோரத்தில் மீண்டும்
இருப்பதற்கு உள்ளத்தால் அஞ்சும் இம்மக்கள் சாய்ந்தமருதின் மேற்கே அமைந்துள்ள நீண்ட
காலமாக நெற் செய்கை பண்ணப்படாத காணிகளை சிறு சிறு துண்டங்களாக கொள்வனவு செய்து
குறித்த இடத்தை மேட்டுநிலப்பயிர் செய்வதுடன் அங்கு குடியிருக்க முயற்சிக்கும் போது
அரசின் சுற்று நிருபங்களைக்காட்டி இவர்களது முயற்சிக்கு தடைகள்
விதிக்கப்படுகின்றன.
ஏனைய பிரதேசங்களில் இவ்வாறான
குடியேற்றங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போது அரசே முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு
அரச நிலங்களை பங்கிடும் போது இம்மக்கள் மட்டும் தடுக்கப்படுவது கவலையளிப்பதாக
மேற்படி பதாதை ஏந்தி போராட்டம் செய்தவர்களால் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 2014-06-08 ம் திகதி சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் அல் அமான
நற்பணி மன்றத்தின் 9வது ஆண்டு நிறைவை ஒட்டி அதன் தலைவர் ஏ.எல்.ஏ பரீட் அவர்களது தலைமையில் இடம்பெற இருந்த நிகழ்வுக்கு
வருகை தந்த கல்முனை அபிவிருத்தி குழுவின் தலைவரும் பாராளமன்ற உறுப்பினருமான
எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள் வருகை தந்தபோதே மேற்படி பதாதை ஏந்தியா போராட்டம்
இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment