இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

7/10/2014

ஸதகத்துல் ஜாரியா "என அறியப்படும் ஸ்ரீ லங்கன் முஸ்லிம் சாரிட்டி-யு .கே தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக் கூட்டமும் இப்தார் நிகழ்வும்

"ஸதகத்துல் ஜாரியா "என அறியப்படும் ஸ்ரீ லங்கன் முஸ்லிம் சாரிட்டி-யு .கே    தன்னார்வ தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த பொதுக் கூட்டமும்    இப்தார் நிகழ்வும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிக்கிழமை  ஜூலை மாதம் 12ஆம் திகதி கிழக்கு லண்டனின் ஈஸ்ட் ஹாம் நகரில் உள்ள  Hartley Centre இல் நடை பெற ஏற்பாடாகி உள்ளது 

இன் நிகழ்வில் பயனுள்ள இஸ்லாமிய உரை மற்றும் அமைப்பின் வருடாந்த அறிக்கை, இணையத்தள அங்குராப்பணம், மற்றும் சதகதுள் பித்ரா, சகாத் மற்றும் சதக்கா பங்களிப்போரின் நிதி சேகரிப்பு ,புதிய அங்கத்தவர்கள் அனுமதி மற்றும் இப்தார்  என்பன நடை பெரும் என எதிர் பார்க்கப்படுகின்றது 


ஸதகத்துல் ஜாரியா அமைப்பானது பிரித்தானிய  மற்றும் இலங்கையில் வசிக்கின்ற இலங்கையை பிறப்பிடமாக கொண்ட முஸ்லிம்களின் நலன்களையும்  நிலையான தர்மத்தை ஊக்குவிப்பதனையும் அடிப்படையாகக் கொண்டு  பிரித்தானியாவில் 2009 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டு   சட்டபூர்வ சமூக நிதியமாக 2012 இல் பதிவு செய்து   சமூக நலன், கல்வி மேம்பாடு, அஹதியா இஸ்லாமிய கல்வி, தொழில் வாய்ப்பு கருத்தரங்குகள், பள்ளிவாசல் புனர்நிர்மாணம், குடிநீர் வசதிகள், மேலும் வாழ்க்கைத்தர உயர்வு போன்ற நிலையான தர்ம சேவைகளை கடந்த 5  வருட காலமாக பிரதேசவாரியான வேறுபாடுகளற்று இலங்கையிலும் பிரித்தானியாவிலும் முக்கிய சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றது  

கடந்த ஜனவரி மாதத்திலும் இவ் வமைப்பின் ஏற்பாட்டில்  நடந்திருந்த   "எங்கள் குடும்பமே  , எங்களின் அத்திவாரம்" என்ற தொனிப் பொருளிலான விசேட ஒன்று கூடல் நிகழ்வும்  கலந்து கொண்டோர் மற்றும் ஆர்வலர்களை மிகவும் கவர்ந்திருந்தது 

 "மேற்கத்தைய தாக்கத்தில் வளரும் எம் பிள்ளைச் செல்வங்களின் சவால்களை எதிர் கொள்ள பெற்றோராகிய நாம் தயாரா?","இஸ்லாமிய வழியில் பிள்ளை வளர்ப்ப்பும் ; பிள்ளைகள் பெற்றோர் மீது கொள்ள வேண்டிய கடப்பாடும் , கண்ணியமும்", மற்றும்  "இஸ்லாமிய குடும்ப அமைப்பை கட்டி எழுப்புவோம்"  போன்ற தலைப்புகளில் முறையே  சிறுவர் உடல் நிலை விசேட நிபுணரும் வைத்தியக் கலாநிதியுமான இலங்கையைச் முஸ்தபா ரயீஸ் , சவூதி அரேபியாவைச் சேர்ந்த உஸ்தாத் அபு பிலால் அப்துர் ரஹ்மான்  மற்றும் இந்தியாவைச் சேர்ந்த   வைத்தியர் அஹ்மத் கபீர் ஆகியோர் கலந்து தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சிறப்புரைகளை ஆற்றி தாயகம் விட்டு  புலம் பெயர் வாழும் குடும்பத்தவர்களின்  மத்தியில்  சிறந்த விழிப்புணர்வை 
ஏற்படுத்தி இருந்தது 

இவ்வாறான மாநாடுகள், கலந்துரையாடல்கள் ஈஸ்ட் ஹாம் வாழ்  இலங்கை  இந்திய முஸ்லிம் மக்களிடையே சமூக அக்கறையை ஏற்படுத்துவதுடன் சமூக ஒற்றுமையையும் மேம்படுத்தி இருந்ததாக  நிகழ்வில் கலந்துகொண்ட மக்களிடையே பேசப்படிருந்ததும்  இங்கு குறிப்பிடத்தக்கது 


முஸ்லிம்களின் நலன்களையும்  நிலையான தர்மத்தை ஊக்குவிப்பதனையும் அடிப்படையாகக் கொண்டு செயற்படும் இத் தன்னார்வ தொண்டு அமைப்பில் சேர்ந்து செயற்பட விரும்பும் நலன் விரும்பிகள் http://www.slmcuk.org    என்ற இணையத்தள முகவரி மூலம்  தகவல்களை பெற்று  பெற்று  தொடர்பு கொள்ளுமாறு அமைப்பினர் கேட்டுக் கொள்கின்றனர் 

தகவல்: ஜெஸீம்   ஏ . ஹமீட், லண்டன்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா